Tuesday, March 13, 2018

இன்றும் செயலாற்றுகிறார்!

நாளைய (14 மார்ச் 2018) நற்செய்தி (யோவான் 5:17-30)

இன்றும் செயலாற்றுகிறார்!

'என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார். நானும் செயலாற்றுகிறேன்' என்று ஓய்வுநாள் பற்றிய விவாதத்திற்கு விளக்கம் தருகிறார் இயேசு.

'இன்றும்'

வானகத்தந்தைக்கு ஓய்வுநாள் என்று எதுவும் கிடையாது.

சன்னுக்கு எது சன்டே? என்பது போல அனைத்து நாள்களிலும் கடவுள் இயங்கிக்கொண்டே இருக்கிறார்.

கடந்த ஞாயிறு பார்லர் சென்றிருந்தேன். முடிவெட்டிக் கொண்டிருந்த முருகன் அண்ணன் தன் குடும்ப பின்புலம் பற்றிப் பேச்சுக்கொடுத்தார். 'நீங்க என்னைக்காவது லீவ் எடுப்பீங்களா?' என்று கேட்டேன். 'காசு நிறைய வச்சிருக்கிறவன் அந்தக் காசை என்ன செய்ய என்று யோசித்தபோது வந்ததுதான் சார் லீவ்!' என்றார். 'புரியவில்லை' என்றேன். 'கையில் ஒன்னும் இல்லாதவனுக்கு எல்லா நாளும் ஒன்னுதான். அவன் அன்னைக்கு வேலை செஞ்சாதான் அவனுக்குச் சாப்பாடு. காக்கா கூட்டத்தை பாருங்கள். காலையில இந்த வாசலுக்கு தினமும் ஒரு காக்கா வரும். நான் தண்ணியும் சோறும் வைப்பேன். அந்தக் காக்காவுக்கு லீவும் கிடையாது ஒன்னும் கிடையாது. நாமளா லீவை உருவாக்கி நாமே அதுக்கு ஒரு தியரி வைத்துக்கொள்கிறோம்.

இது உண்மைதான்.

பொதுவுடைமை சமுதாயத்தில் விடுமுறை என்பது கிடையாது. ஓய்வு நேரத்தைக் கூட மற்றவர்களின் முன்னேற்றத்திற்கான நேரமாக மாற்ற வேண்டும் என பொதுவுடைமை அழைப்பு விடுத்தது.

ஆனால் முதலாளித்துவத்தின் முதுகெலும்பு விடுமுறை. வெளிநாட்டு வாழ்க்கையை கொஞ்ச நேரம் யோசித்துப் பார்;த்தால் இது விளங்கும். விடுமுறைக்காக வேலை செய்பவர்கள் போல வேலை செய்வார்கள் அவர்கள். தங்கள் வீக்எண்டைக் கொண்டா திட்டம் பேடுவார்கள். இப்படி நிறைய நடக்கும். ஏனெனில் அவர்கள் ஓய்வு எடுத்தால் அடுத்த ஐந்து நாள்கள் தங்கள் முதலாளிகளுக்கு வேலை செய்ய முடியும்.

இயேசுவின் தந்தை ஒரு பொதுவுடைமைவாதி.

எல்லா நாளும் மக்களின் தேவை உண்டு. எல்லா நாளும் மக்களுக்காக அவர் உண்டு.

விடுமுறை அல்லது ஓய்வு என்பது தன்மையம் கொண்டது.

வேலை அல்லது பணி என்பது பிறர்மையம் கொண்டது.

இயேசு எப்போதும் பிறர்மையம் கொண்டவராகவே இருப்பதால் அவர் தன் ஓய்வைப் பற்றிக் கவலைப்படவில்லை.


3 comments:

  1. சன்னுக்கு எது சன்டே? // nice punch

    ReplyDelete
  2. இயேசுவின் தந்தை ஒரு பொதுவுடைமைவாதி.எல்லா நாளும் மக்களின் தேவை உண்டு; எல்லா நாளும் மக்களுக்காக அவர் உண்டு. விடுமுறை அல்லது ஓய்வு என்பது தன்மையம் கொண்டது; வேலை அல்லது பணி என்பது பிறர் மையம் கொண்டது.இயேசு எப்போதும் பிறர்மையம் கொண்டவராகவே இருப்பதால் அவர் தன் ஓய்வைப்பற்றிக்கவலைப்படவில்லை." தன் மையம்","பிறர் மையம்" அழகான வார்த்தைகள். இதில் நான் எந்த " மையம்?" யோசிக்கிறேன்..... யோசிக்க வைத்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  3. Good morning Yesu. Good reflection. Have a great day ahead.

    ReplyDelete