Saturday, January 7, 2017

திருக்காட்சி பெருவிழா

நாளை நாம் திருக்காட்சி பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

முன்பின் தெரியாத மூவர் குழந்தை இயேசுவைச் சந்திக்கின்றனர்.

'இவர்கள் நட்சத்திரத்தைக் கண்டதால் இறைவனைத் தேடிச் செல்லவில்லை.
மாறாக, இறைவனைத் தேடிச் சென்றதால் நட்சத்திரம் இவர்கள் கண்களுக்குப் பட்டது!' என்கிறார் பொன்வாய் அருளப்பர்.

இன்று மாலை வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன்.

ஏறக்குறைய 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஒரு ஆட்டை தன் மடியில் கிடத்தி அதன் உடம்பில் ஒட்டியிருந்த பூச்சிகளையும், முட்களையும் அகற்றிக்கொண்டிருந்தார்.

அந்த ஆட்டுக்குட்டி படுத்திருந்த விதமும், அவர் அதைத் தடவிக்கொடுத்த விதமும், ஏதோ, இவர்கள் இருவரும் ஒருவர் மற்றவருக்காய் பிறந்தவர்போல இருந்தது.
அழகர்கோயில்-புதூர் ரோட்டில் வசிக்கும் இவர் இந்த ரோட்டைத் தாண்டி வெகுதூரம் சென்றிருக்க வாய்ப்பில்லை.

அமெரிக்காவின் புதிய அதிபர், இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கை, ஏடிஎம்மில் எவ்வளவு பணம் எடுக்கலாம், பான் கார்ட், மைக்ரோசாப்ட், ஆன்ட்ராய்ட் ஃபோன், வாட்ஸ்ஆப் டி.பி., டுவிட்டர் செய்திகள் எதுவும் இவரிடம் பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை.

காலையில் சூரியன் பார்த்து எழுகிறார். இரவில் நிலவு பார்த்து தூங்கச் செல்கிறார்.

நடுவில் எழுந்தால் சில நட்சத்திரங்கள் இவர் கண்களில் படும்.

எந்த நட்சத்திரத்தையும் பின்பற்றி இவர் நீண்ட பயணம் செய்யத் தேவையில்லை.

எந்த அரண்மனையின் பளிங்குக் கற்களையும் மிதிக்கத் தேவையில்லை.

யாரிடமும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

இவரின் ஆழ்ந்த உறக்கத்தில் கனவும் வரப்போவதில்லை.

ஆனால், இவரும் ஞானியே.

ஞானம் என்பது நிறைய அறிவதிலும், நிறைய தேடுவதிலும், நிறைய அனுபவிப்பதிலும் இல்லை.

இல்லையா?

4 comments:

  1. இந்தப் பதிவை எழுதிய கரங்களைக் கண்ணில் ஒத்திக்கொள்ளலாம் போலிருக்கிறது. இம்மண்ணில் எளிமைக்கு இலக்கணமானதொரு வாழ்க்கை வாழும் ஒரு கடைக்கோடி பிரஜையின் அன்றாட விஷயங்களைக் கவித்துவமாக வடித்திருக்கிறார் தந்தை.இவர் கண்களில் மட்டும் எப்படி மிகச்சாதாரண விஷயங்கள் கூட இத்தனை அசாதாரணமாகப் படுகின்றன.வியப்பாயிருக்கிறது. "காலையில் சூரியன் பார்த்து எழுகிறார்;இரவில் நிலவு பார்த்துத் தூங்கச் செல்கிறார்;நடுவில் எழுந்தால் சில நட்சத்திரங்கள் இவர் கண்களில் படும்.".... அருமை....அருமை.தந்தையின் அந்த இறுதி வரிகள்....."ஆம்! ஞானம் என்பது நிறைய அறிவதிலும்,நிறையத் தேடுவதிலும்,நிறைய அனுபவிப்பதிலும் இல்லை.; இறைவனால்...இயற்கையால் எழுதப்பட்ட நம் வாழ்க்கையை ஒரு வரலாறாக மாற்றும் வித்தையில் தான் இருக்கிறது." பதிவில் வரும் ஆட்டுக்குட்டியும்,அதைத் தடவிக்கொடுக்கும் அந்த 35 வயது மனிதனும் என் கண்களை விட்டு மறைய மறுக்கின்றனர். திருக்காட்சி பெருவிழாவிற்குப் பெருமை சேர்க்க இதற்கு மேல் எதுவும் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.இறைவன் தந்தையை நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்!!!வாழ்த்துக்களும்....நன்றியும்......

    ReplyDelete
  2. Anonymous1/08/2017

    Super Yesu.

    ReplyDelete
  3. GITA - NEW YORK

    Dear Fr. YESU:

    As I read your reflection on Epiphany of our Lord and on the shepherd who traveled with his sheep on his lap in Madurai, I remembered Thomas a Kempis and his "THE IMITATION OF CHRIST":

    "I would rather feel compunction than know how to define it"
    [1,1.3]

    "When the day of judgement comes, it will not be asked of us what we have read, but what we have done; not what fine discourses we ha e made, but like religious we have lived" [1, 3. 5]

    ReplyDelete