'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க முடியும்!' என இயேசுவிடம் தொழுநோய் பிடித்த ஒருவர் வருகிறார்.
'நான் விரும்புகிறேன். உமது நோய் நீங்குக!' என இயேசுவும் நலம் தருகிறார்.
ஆனால்,
'யாருக்கும் சொல்ல வேண்டாம்!' என இயேசு சொல்ல,
அவர் 'எல்லாரிடமும் போய் சொல்கின்றார்.'
இதில் என்ன முரண் என்றால்,
இதுவரை ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டிருந்த அந்த நோயுற்றவர் ஊருக்குள் நுழைகின்றார்.
இதுவரை ஊருக்குள் இருந்த இயேசு வெளியேறுகின்றார்.
நாம் நினைப்பதை கடவுள் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்.
கடவுளும் அதை அதனதன் நேரத்தில் செய்கின்றார்.
ஆனால், கடவுள் என்னிடம் சொல்வதை நான் செய்ய மறுக்கிறேன்.
தொழுநோய் பிடித்தவர் செய்தது பெரிய பாவம் இல்லைதான்.
ஊருக்குள் வந்திருப்பார். என்னப்பா நீ இங்க! என்று கேட்டிருப்பார்கள். 'இப்படி இப்படி நடந்துச்சு!' என அவரும் சொல்லியிருப்பார்.
தன்னை அறியாமலேயே இயேசுவை வெளியேற்றிவிட்டார்.
என்னை அறியாமல் நான் செய்யும் சிறு சிறு செயல்கள்கூட சில நேரங்களில் கடவுளை என் ஊரை விட்டு வெளியேற்றிவிடலாம்.
முதல் வாசகத்தில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வைக் குறித்தே வாசிக்கின்றோம்.
எகிப்தில் கொள்ளை நோய்களினின்று தங்களை விடுவித்து, செங்கடல் வழியே கால் நனையாமல் கடத்தி வந்த கடவுளையும், அவரின் அரும்பெரும் செயல்களையும் நொடிப்பொழுதில் மறந்த இஸ்ரயேல் மக்கள்,
'ஐயோ! இங்க தண்ணி இல்லயே! சாப்பாடு இல்லயே! மட்டன், சிக்கன், ஃபிஷ் இல்லையே!' என புலம்புகின்றனர்.
அவர்களின் கடின உள்ளத்தைக் கடிந்து கொண்டு நொடிப்பொழுதில் அவர்களைவிட்டு தூரமாகின்றார் கடவுள்.
ஆக, அவர் சொல்வதைக் கேட்காததுதம், அவர் செய்வதை மறத்தலும்
இறைவனை என்னிடமிருந்து அந்நியமாக்கிவிடுகின்றன!

யாருக்கும் சொல்ல வேண்டாம்!' என இயேசு சொல்ல,
ReplyDeleteஅவர் 'எல்லாரிடமும் போய் சொல்கின்றார்.'
// "திங்காதே" ன்னு சொன்ன கனியைத் தின்னவங்களின் சந்ததி..
வாழ்க்கையின் சில நிதர்சனமான உண்மைகள் அடுத்தவர் சுட்டிக்காட்டும்போது தான் நமக்கு விளங்குகின்றன. இன்றையப் பதிவில் வரும் தொழுநோயாளியின் விஷயத்தில் நாமும் கூட ' அவர் செய்தது பெரிய பாவமில்லை' என்றுதான் நினைத்திருப்போம்'....' தன்னை அறியாமலே இயேசுவை அவர் வெளியேற்றி விட்டார்' எனத் தந்தை சுட்டிக்காட்டும் வரை.தொழு நோயாளி கேட்டதை இயேசு செய்திருந்தும்,இயேசு எதிர்பார்த்த சாதாரண விஷயத்தை தொழுநோயாளி செய்யாமல் போனதில் என்ன நியாயம் இருக்க முடியும்? பல நேரங்களில் இறைவனின் அரும்பெரும் செயல்களை மறந்து,கடின உள்ளத்தினராய் மாறிப்போன இஸ்ரேல் மக்களைப் போன்று நாமும் அவர் சொல்வதைக் கேட்காமலும்,அவர் செய்வதை மறந்தும் போகிறோம்."இவ்ளோதானே! இது என்ன பெரிய பாவமா?" என்று நாம் செய்யும் காரியங்களுக்கு நாமே ஒரு நியாயம் கற்பிக்கிறோம்.இப்படிப்பட்ட நேரங்களில் இறைவன் நம்மிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறார் எனக் கூறுகிறார் தந்தை. சின்னதோ,பெரியதோ என்றில்லாமல் ' இந்தக் காரியத்தைச் செய்யலாம் அல்லது செய்யக்கூடாது' எனும் நிலைப்பாட்டில் நாம் நேர்மை காட்டினோமெனில் ' என் இறைவன் என்றும் என்னில்' என்ற சொலவடைக்குச் சொந்தக்காரராவோம். விளக்கில் வெளிச்சம் மங்கும்போது அதன் திரியைத் தூண்டிவிடும் கரமாக நின்று செயல்படும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteGod's ways are absolutely unique 🙏
ReplyDeleteSuper Yesu
ReplyDeleteயாருக்கும் சொல்ல வேண்டாம்!' என இயேசு சொல்ல,
ReplyDeleteஅவர் 'எல்லாரிடமும் போய் இயேசுவைப் பற்றி சொல்கின்றார்.'
இது துறவிகளுக்கு ஒரு சவால்.