Friday, January 20, 2017

மதிமயங்கி

நாளை நற்செய்தியில் (காண். மாற்கு 3:20-21) வரும் இயேசுவைப் பார்க்க பாவமாக இருக்கிறது.

அவருக்கு சாப்பிடக்கூட நேரமில்லை. அந்த அளவுக்கு வீட்டில் மக்கள் கூட்டம்.

கொஞ்ச நாளைக்கு முன்னால் வரும் ஃபைவ் ஸ்டார் விளம்பரத்தில்,

'ஃபைவ் ஸ்டார் சாப்பிடுங்க. மெய்ம்மறந்து போயிடுங்க!' என்ற வாசகம் வரும்.

இயேசுவை 'மதிமயங்கி இருக்கிறார்' என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர். இங்கே பயன்படுத்தப்படும் கிரேக்க வார்த்தை, 'இயேசு தனக்கு வெளியே இருக்கிறார்' என்பதுதான்.

எனக்கு வெளியே இருக்கும்போது நான் மதிமயங்குகிறேன்.

காதலில் இருப்பவர்களை மதிமயங்கியவர்கள் என்று சொல்ல நான் கேட்டதுண்டு.

இதன் லாஜிக் ரொம்ப சிம்பிள்: 'ஒருவர் தனக்கு வெளியே சென்றுவிடுகின்றார். அடுத்தவர் உள்ளே வந்து குட்டி சேர் போட்டு அமர்ந்து கொள்கின்றார்.'

இயேசுவைப் பொறுத்தவரையில் அவரது பணிதான் அவரின் முழு எண்ணத்தையும் ஆக்கிரமித்துக்கொள்கிறது.

ஆனால், இயேசுவோட உறவினர்கள் எல்லா உறவினர்கள் போல இருக்கிறார்கள்.

இயேசுவுக்கு ஏதாவது ஆகுமா என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பதை' மெய்ப்பொருள் என நினைத்துக்கொள்கிறார்கள்.

1 comment:

  1. கொஞ்சம் முரண்பாடு கொண்டதாக உள்ளது இன்றையப் பதிவு . நம்மைத்தவிர யாரோ எதுவோ நம்மை ஆக்கிரமித்தலே மதிமயங்குதல் என நினைக்கிறேன்.இந்த விதத்தில் பார்த்தால் இயேசுவும் ஊண்,உறக்கம்
    துறந்து தன்னை நாடி வந்தவர்களுக்கு இறையரசைப் போதிப்பதில் தன்னை மறந்து இருந்திருக்கலாம்.எப்பவும் மற்றவரை விட உற்றாரே வம்பு பேசுவர்.எப்பொருள் மெய்ப்பொருள் என்பது அவரை விட யாருக்குத் தெரியும்? கொஞ்சம் குழப்புகிற பதிவுதான்!

    ReplyDelete