Friday, January 6, 2017

கானாவூர்த் திருமணம்

நான் புண்ணிய பூமி சென்றபோது கானாவூர்த் திருமண நிகழ்வு நடந்ததாகச் சொல்லப்படும் ஆலயத்திற்குச் சென்றிருந்தேன்.

சென்ற நேரம் மாலை 5 மணி. மிகவும் சோர்வாக இருந்தது.

ஒரு ஓரமான நாற்காலியைப் பிடித்து அமர்ந்து கொண்டேன். திருப்பலி ஆடை அணியவும் துணியாத சோர்வு. இருந்தாலும் அணிந்து கொண்டு அமர்ந்தேன்.

எங்களோடு வந்திருந்த தம்பதியினர் தங்கள் திருமண வாக்குறுதிகளைப் புதுப்பித்துக்கொண்டனர்.

மற்றவர்கள் எங்கே ஒயின் வாங்கலாம் என்றும், எப்படி கொண்டு செல்வது என்றும் பேசிக்கொண்டனர்.

நாளைய நற்செய்தியில் நாம் கானாவூர் திருமண நிகழ்வை வாசிக்கின்றோம் (யோவான் 2:1-12).

யோவான் நற்செய்தி நிகழ்வுகளில் எப்போதும் இரண்டு அர்த்தங்கள் உண்டு. ஒன்று மேலானது. மற்றொன்று ஆழமானது.

யோவான் எழுதும் நிகழ்வில் என்ன விந்தை என்றால், எல்லாரும் இருக்கிறார்கள். ஆனால் மணமக்கள் இல்லை. மணமக்கள் இல்லாத திருமண நிகழ்வா? என்று நாம் கேட்கலாம்.

'தன்னைப் படைத்தவரைக் கண்ட தண்ணீர் வெட்கத்தால் சிவந்தது'

என புதுக்கவிதையில் நிகழ்வை எழுதுகிறார் ஜெர்மானியக் கவிஞர் ஒருவர்.

திராட்சை ரசம் குடித்த பலர் திருப்தி கண்டனர்.

சிலர் இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்கின்றனர்.

எனக்கு இந்த நிகழ்வில் ஆச்சர்யமான நபர் வேலைக்காரர். இவர்தான் அறிகுறியை முதலில் அனுபவிக்கின்றார். வாழ்வின் அற்புதங்கள் மிக சாதாரண நபர்களுக்கே கிடைக்கின்றன.

5 comments:

  1. வாழ்வின் அற்புதங்கள் மிக சாதாரண நபர்களுக்கே கிடைக்கின்றன.// because they believe without questions

    ReplyDelete
  2. உண்மைதான்...இயேசுவின் பிறப்பு முதன்முதலில் இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல் இந்தத் திருமணத்திலும் இயேசுவின் முதல் புதுமை ஒரு சாமான்யர் மூலம் வெளி உலகுக்குத் தெரிய வருகிறது.ஆம்.." வாழ்வின் அற்பதங்கள் மிகச் சாதாரண நபர்களுக்கே கிடைக்கின்றன" இதற்கான காரணம் சகோதரி கேத்தரின் சொல்வது போல் " அவர்கள் கேள்வி எதவும் கேட்காமல் நடந்ததை நடந்ததாகவே நம்புகிறார்கள்." அவ்வளவு தான். நடந்த எதையும் கூறுபோட்டுப் பார்க்காத குழந்தை மனது தான் அதற்குக்காரணம்.போகிற போக்கில் பெரிய விஷயங்களை சாதாரணம் போல் அள்ளித்தெளிக்கிற தந்தைக்கும்," தன்னைப்படைத்தவரைக்கண்ட தண்ணீர் வெட்கத்தால் சிவந்தது" எனும் புதுக்கவிதையின் சொந்தக்காரர் ஜெர்மானியக் கவிஞனுக்கும் ஒரு சபாஷ்!!!

    ReplyDelete
  3. Very interesting conclusion...

    ReplyDelete
  4. GITA - New York

    Dear Fr YESU:

    I traveled to Cana via your blog.
    To attend the wedding feast.

    Yes, Mary with Jesus was there.
    And the disciples had been invited as well.
    Did the wine run out as they drank too much?

    Your take on the waiter in charge is great.
    Indeed, greater things are always seen and appreciated by those who have patience "to wait".

    Most wedding invitations will carry the names of the Groom and the Bride.
    Like Selvan YESU weds Selvi GITA.
    They aren't that prominent in Cana.

    Perhaps in a transcendent and mystical sense another Groom and another Bride preside over the Feast.
    Jesus the Greatest of all Bride Grooms in every Wedding
    and Mother Mary the "Full of Graced One" - the Bride.

    John 2:9 reads: "Then the waiter in charge called "the Groom" over and remarked to him"..
    May be, I stand to be corrected...

    The Groom was ready - waiting in the hall and answered the call of the waiter.
    And the Bride was readying - doing her last minute make-up...


    ReplyDelete
  5. ஆமாம்...உண்மையே!

    ReplyDelete