Friday, January 13, 2017

பொங்கல்

'என்னால் கரும்பை கடிக்க முடியுமா?'

இந்தக் கேள்வியுடன் இன்று காலை திருப்பலி முடிந்து வண்டியில் திரும்பிக் கொண்டிருந்தேன்.

கரும்பு கடித்து ஏறக்குறைய 12 ஆண்டுகள் ஆகிவிட்டன.

கடைசியாக விரகனூர் ஆன்மீக பயிற்சியகத்தில் கடித்தது நன்றாக நினைவில் நிற்கிறது.

அதற்குப் பின் பொங்கல் கொண்டாட்டங்கள் இல்லை. மதுரையில் பங்குத்தளங்களில் இருந்தபோதும் சாப்பிடவில்லை. கரும்புச்சாறு ஒவ்வாமையை உருவாக்கியது ஒரு காரணம்.

கரும்பு - மிகவும் வித்தியாசமான தாவரம்.

கரும்பு ஒரு நீண்ட தண்டுடைய தாவரம்.

வெகு சில தாவரங்களின் தண்டுகளையே நாம் சாப்பிடுகிறோம். பனை மரம் மற்றும் தென்னை மரம் போன்ற மரங்களும் தண்டுகள் நீண்டிருக்கும் தாவரங்களே.

கரும்பில் நுனிக்கரும்பு இனிக்காது.

அடிக்கரும்பு வேர்களாக இருக்கும்.

நடுவில் இருக்கும் கரும்பிலும், கணுக்கள் அகன்று இருந்தால்தான் சாப்பிட நன்றாக இருக்கும்.

கணுக்களே இல்லாமல் கரும்பு இருந்தால் நன்றாக இருக்குமே என நினைத்ததுண்டு.

ஒரு கணுவிலிருந்து மற்றொரு கணுவிற்கு மாறும்போது அங்கே எத்திக்கொண்டிருக்கும் ஒரு பூவோ எதுவோ ஒன்று கசப்பைத் தரும்.

ஆக, இனிப்பு தரும் கரும்பிலும் கசப்பு உண்டு.

பொங்கல், கரும்பு - இனிமை!

மஞ்சள், சந்தனம் - மங்களம்!

பொங்கட்டும் பொங்கல் நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும்!

9 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. கரும்புக்கு கொடுத்த விளக்கம் மிகவும் நன்று.ஒரு தமிழன் கரும்பு சாப்பிடமால் இருப்பது ஆச்சரியம்தான். கரும்பினும் இனிமையாக கருத்துக்களை வழங்கும் தந்தை ஏசுவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ஒரு தாவரவியல் ஆராய்ச்சியாளரின் கைவண்ணமும், முதிர்ச்சியும் தெரிகிறது தந்தையின் பதிவில்....அதிலும் கரும்பைப்பற்றிய புரிதலில்.கரும்பு கடித்து 12 வருடங்கள் ஆகிறது எனும் விஷயம் எனக்கும் கூட வருத்தம் தருகிறது.கவலை வேண்டாம்; ஏக்கம் வேண்டாம்.நீங்கள் ஏற்கனவே இருந்த பங்கென்பதால் அழைப்பு விடுக்கிறேன் எங்கள் பங்கிற்கு.ஒரு கரும்பை கணுக்கணுவாக ருசித்து சாப்பிடலாம்.உங்களின் ஒவ்வாமையை ஒரு மாத்திரை மூலம் சமாளித்துக்கொள்ளலாம்.சரியா? பதிவின் அந்த இறுதி வரிகள்...." பொங்கல்-கரும்பு- இனிமை!" " மஞ்சள்- சந்தனம்- மங்களம்!" அத்துடன் வளமான வாழ்விலும் வருத்தங்கள் இருக்கும் என்பது போல,இனிப்பு தரும் கரும்பிலும் கசப்பும் உண்டு என்ற பொங்கல் செய்தி வேறு! இனிமையும்,மங்களமும் சேர்ந்து கொண்டாடும் பொங்கல் நம் உள்ளங்களிலும்,இல்லங்களிலும் மகிழ்வைக்கொண்டு வரட்டும்! தந்தைக்கும்,மற்றும் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  5. GITANJALI A BERNARD
    New York

    Dear Fr YESU:

    May I wish you and your readers a Happy and Blessed Pongal.
    May your blogs continue to be sweet as the Sugar Canes themselves...

    ReplyDelete
  6. Anonymous1/14/2017

    Happy Pongal Yesu

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. இனிப்பு தரும் கரும்பிலும் கசப்பு உண்டு.

    Karumbin moolam Karuthu sonna fatherku nanri... Pongal Vila vaalthu.... 🌾🌾

    ReplyDelete
  9. Yes, it is nice to read. We people, who live in foreign countries, can not imagine such wonderful things like Karumbu and Pongal. Happy Pongal from Germany. Arul

    ReplyDelete