Thursday, January 19, 2017

அவரோடு

எனது குருத்துவ அருள்பொழிவு விருதுவாக்கு இதுதான்: 'அவரோடு'

நாளை நாம் வாசிக்கும் நற்செய்தியில் (காண். மாற்கு 3:13-19) தான் இருக்கிறது இந்த வார்த்தை.

'தம்மோடு இருக்கவும் ... அவர் பன்னிருவரை நியமித்தார்' என வாசிக்கிறோம்.

'அவரோடு,' 'அவளோடு,' 'அவனோடு,' 'அதோடு' என நிறைய கிண்டல்கள் வந்தன விருதுவாக்கைப் பற்றி.

ஒற்றை வார்த்தையில் விருதுவாக்கு எடுக்க வேண்டும் என்ற வேட்கையில் தோன்றியதே இது.

நாம் நம் வேலைகளை 'அவருக்காக' செய்ய முடியாது.

ஏனெனில், நாம் செய்யும் எதுவும் அவருக்குத் தேவையில்லை.

'அவரில்' செய்ய முடியாது.

ஏனெனில் அவரின் இயல்பு என்பது நமக்கு முழுமையாகத் தெரியாது.

ஆனால், நாம் அவரோடு செய்யலாம். அவருடைய உடனிருப்பை பல்வேறு நிலைகளில், பல்வேறு நபர்கள் வழியாக நாம் அனுபவிக்க முடியும்.

இன்று பல நேரங்களில் நாம் அனுப்பப்படவும், நிறைய செய்யவும் ஆசைப்படுகிறோம்.

ஆனால், 'அவரோடு' இருந்தாலன்றி, 'அனுப்பப்படுதல்' சாத்தியமில்லைதானே.

அதே நேரத்தில், 'அவரோடு' இருந்துகொள்வதும் ஆபத்து. அது தேக்கநிலையை உருவாக்கிவிடும்.

3 comments:

  1. தந்தையின் அந்த ஒற்றை வார்த்தை விருதுவாக்கு ' அவரோடு'.... அழகுதான்.அந்த தலைப்பில் தந்தையால் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை வாசித்து முடித்ததும் ஒரு சுகமான அனுபவம்.இந்த விருதுவாக்கைத் தன்னுடையதாக்கியிருப்பதற்குத் தந்தை குறிப்பிடும் காரணம் " அவருடைய உடனிருப்பை பல்வேறு நிலைகளில்,பல்வேறு நபர்கள் வழியாக நாம் அனுபவிக்க முடியும்." என்பது.மிகச் சரியே! ஆனால் "அவரோடு இருப்பது தேக்க நிலையை உருவாக்கி விடும்".....என்பது எப்படிச் சரியாகும்? அவர் கரம் பற்றி நாமோ இல்லை நம் கரம் பற்றி அவரோ, இருவரும் இணைந்து நடந்தால் எங்கிருந்து வரும் தேக்க நிலை? "குட்டிப்பூவாய்" த் தோன்றும் பல விஷயங்கள் அழகானவை என்பதற்குத் தந்தையின் விருதுவாக்கும் ஒரு சான்று.வாழ்த்துக்கள்! தங்களையும்,தங்களின் விருதுவாக்கையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete
  2. 'அவரோடு' என்ற அழகான வார்த்தை ஆயிரம் அர்த்தங்களை கொடுக்கிறது. அதேவேளையில் அனுப்பப்பட்ட ஓவ்வொருவரும் 'அவரோடு' வாழும் போது ஆயிரம் பணிகளை ஆற்றலோடு செய்ய முடியும். 'அவரோடு' வாழும் தந்தைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete