நாளை ஆண்டின் முதல் வெள்ளி.
மாதத்தின் முதல் வெள்ளியே நமக்கு முக்கியமாகத் தெரியும்போது ஆண்டின் முதல் வெள்ளி இன்னும் முக்கியம் அல்லவா?
எல்லா நாளும் ஒன்றுதானே. அதில் என்ன வெள்ளி - சனி?
ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு இருக்கவே செய்கிறது.
எல்லாரும் மனிதர்கள்தாம். ஆனால் நாம் எல்லாரோடும் ஒன்றுபோல பேசுவதோ அல்லது பழகுவதோ இல்லையே?
'வெள்ளி' என்ற கிழமை உரோமை கடவுள் வீனஸ் என்பவரின் பெயர்.
வீனஸ் என்ற கிரகம்தான் வெறும் கண்களுடன் நம் கண்களுக்குத் தெரிகின்ற கிரகம்.
இந்து மதத்தில் வெள்ளி லட்சுமி அல்லது துர்க்கை அம்மனுடனும், இசுலாம் மதத்தில் வெள்ளி ஓய்வு நாளாகவும் கருதப்படுகின்றது.
புனித வெள்ளியைத் தொடர்ந்து எல்லா வெள்ளிக்கிழமைகளும் புனிதம் பெறுகின்றன கிறிஸ்தவத்தில். வெள்ளி இல்லையேல் ஞாயிறும் உயிர்ப்பும் இல்லை.
17ஆம் நூற்றாண்டில் மார்கரெட் மேரி அலகாக் அவர்களுக்குத் தன் இதயத்தை திறந்து காட்டிய இயேசு வெள்ளிக்கிழமை பக்தியை தொடங்கி வைத்தார் என்கிறது அலகாக் அவர்களின் தன்வரலாற்று நூல்.
வெள்ளிக்கிழமை வரை வேலை பார்த்து சளைத்தவுடன் அந்த வாரத்தை எண்ணிப்பார்த்து நன்றி கூறவும், தவறிய வாய்ப்புக்களுக்கு மன்னிப்பு வேண்டவும்தான் திருச்சபையின் கட்டளை செபத்தில் ஒவ்வொரு வெள்ளி காலை வழிபாட்டிலும் திபா 51 இடம் பெறுகிறது.
ஆக, வெள்ளிக்கிழமை நம்மை வீக்எண்ட் ஓய்விற்கும், உற்சாகத்திற்கும் தயாரிக்கிறது.
இறைவனின் அன்பை எண்ணிப்பார்த்து அவரின் இதய நிழலில் குடிகொள்ள நம்மை அழைப்பது ஆண்டின் முதல் வெள்ளியோ, மாதத்தின் முதல் வெள்ளியோ மட்டுமல்ல. ஒவ்வொரு நாளுமே!

'வெள்ளிக்கிழமை'.......இது எம்மத்த்தாருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்குத் தந்தை வைக்கும் காரணங்கள் பல.இந்துக்கள் மங்களம் சேர்க்கும் நாளாகவும்,முஸ்லிம்கள் ஓதுவதற்குச் சிறந்த நாளாகவும்,கிறித்துவர்கள் இயேசுவின் திரு இருதயம் மற்றும் புனித வெள்ளியுடன் தொடர்புடைய நாளாகவும் பார்க்கிறார்கள்.இதில் வாரம் முழுதும் வேலைபார்த்துக் களைத்தவர்கள் இறைவனுக்கு நன்றிகூறவும்,தவறிய வாய்ப்புக்களுக்கு மன்னிப்புக் கோரவும் வெள்ளிக்கிழமையின் கட்டளை செபத்தில் திருப்பாடல்51 இடம் பெறுகிறது எனத் தந்தை கொடுக்கும் தகவல் என் போன்றவர்களுக்குப் புதியது மட்டுமல்ல; அழகானதும் கூட. இறைவனின் அன்பை எண்ணிப்பார்த்து,அவரின் இதய நிழலில் குடிகொள்ள ஒவ்வொரு நாளுமே சிறந்தது தான் எனினும்,நம் வசதிக்காக சில நாட்களை ஒதுக்கி வைப்பதும் நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது.அம்முறையில் ஆண்டின்,மாதத்தின் முதல் வெள்ளியான இன்று இயேசுவின் திரு இருதயத்திற்கு விசேஷமான முறையில் நன்றி சொல்ல இடைக்காட்டுர் செல்லும் வாய்ப்பு எனக்கு இன்று கிட்டியுள்ளது மகிழ்ச்சியான விஷயம்.இறைவனுக்கு நன்றி.தந்தை கூறும் இன்னொரு விஷயம் யோசிக்க வைக்கிறது...." வெள்ளி இல்லையேல் ஞாயிறும் உயிர்ப்பும் இல்லையெனில்,ஒவ்வொரு வெள்ளியும் நமக்கு உயிர்ப்பின் ஞாயிறுக்கு முன்னோடி எனில் நாம் வெள்ளிக்கிழமைகளில் ஏன் துக்கமாக இருக்க வேண்டும்? இன்னும் கொஞ்சம் மகிழ்வை வெளிப்படுத்தலாமே! அழகான பல விஷயங்கள் கொண்ட பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்! தந்தை மற்றும் அனைவருக்காகவும் இயேசுவின் திரு இருதயத்திடம் செபித்து வருவேன்!!
ReplyDeleteஇந்த வெள்ளி அனைவரையும் வீக்எண்ட் ஓய்விற்கும்,உற்சாகத்திற்கும் தயாரிக்கட்டும்!!!