Tuesday, January 3, 2017

நினைவில்

பங்குந்தந்தை ஒருவர் தன் ஆண்டு தியானம் பற்றிய நினைவில் இப்படி எழுதினார்:

'ஒருநாள் இரவில் நான் ஆலயத்தில் அமைதியாய் இருந்தேன்
யாருக்கும் நான் எங்கிருங்கிறேன் என்பது
கடவுளுக்கு மட்டுமே தெரியும்...

நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது -
கடவுளுக்கு மட்டுமே தெரியும்...

அந்த நேரத்தில் என் மனத்திலும், என் உள்ளத்திலும்
என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பது -
கடவுளுக்கு மட்டுமே தெரியும்...

நான் செபித்துக் கொண்டிருந்ததும்,
என் செபத்தின் கருப்பொருளும் -
கடவுளுக்கு மட்டுமே தெரியும்...
மெய்யாகவே
நான் கடவுளோடு இருந்தேன்
கடவுள் என்னோடு இருந்தார்

அப்படிப்பட்டதொரு அனுபவத்திற்கு நான் அடிக்கடி சென்றிருக்கிறேன்
செபிக்க முடியாதபோது
என்ன செபிப்பது என்று தெரியாத போது
நிறைய அலைக்கழிக்கப்படும்போது
என்னுள்ளே வெளியே

தியானத்தில் இருக்கும் இன்று
இந்த அனுபவம் எளிதாக இருக்கிறது

ஆனால் தினமும் என்னால் இப்படி இருக்க முடியுமா?
கடவுளோடு இருக்க நேரம் கண்டுபிடிக்க முடியுமா?
அவரின் தோழமையை உணரும் இடம் கண்டுபிடிக்க முடியுமா?

என் இனிய இறைவா?
உனக்கென கொஞ்ச நேரமும்
உனக்கென அமைதியான இடமும்
உன்னோடு இருக்க
நான் கண்டுபிடிக்க எனக்கு அருளும்...

என்னைப் பற்றி உனக்கு மட்டுமே தெரியும்...

ஆமென்.

1 comment:

  1. என்னே ஒரு பதிவு! என் கண்கள் பனித்து விட்டன.மனத்தின் நிர்வாணத்தைத் துகிலுரித்துக் காட்டியுள்ளார் தந்தை . இது.. சம்பந்தப்பட்ட பங்குத்தந்தைக்கு மட்டுமல்ல....தங்கள் இதயத்தின் மௌனத்தில் இறைவனோடு உறவாடத் துடிக்கும் அனைவருக்கும் இது பொருந்தும். ஒவ்வொரு காலையும் திருப்பலியின் போது என் உள்ளத்தை ஒருமுகப்படுத்த எனக்குள் நடக்கும் போராட்டம் நான் மட்டுமே அறிந்த ஒன்று.தந்தையின் அந்த இறுதி வரிகளை நான் எனதாக்கிக்கொள்ள விழைகிறேன். ஆம்!..." என் இனிய இறைவா! உனக்கென கொஞ்ச நேரமும்,உனக்கென அமைதியான இட மும், உன்னோடு இருக்க நான் கண்டுபிடிக்க எனக்கு அருளும்.என்னைப்பற்றி உமக்கு மட்டுமே தெரியும். ஆமென்." இடைவெளி விட்டு வரும் ஒவ்வொரு பதிவையும் மனத்தைப் பிசைய வைப்பது போல் கொடுக்கும் தந்தையை இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!! அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்கள்!

    ReplyDelete