Thursday, November 26, 2015

கனவுகள்

உசிலம்பட்டியில இருந்து மதுரை கோரிப்பாளையம் வரை பஸ்ல போனீங்கன்னா, ரெண்டு பக்கமும் கண்ணுக்குக் குளிர்ச்சியா ப்ளக்ஸ் போர்டு பார்த்துக்கொண்டே போகலாம்.

'குபுகுபு பாய்ஸ்', 'டெரர் டெவில்ஸ்' என டைட்டிலே தெறிக்கும்.

இந்த பொங்கலுக்கு வச்சா அடுத்த பொங்கல் வரைக்கு எடுக்க மாட்டாங்க.

ஒரே மாதிரி கோட், ஒரு மாதிரி வேஷ்டி-சட்டை, வாயில் அரிவாள் என ரகளை செய்வார்கள்.

இப்போ கொஞ்சம் டிரெண்ட் மாதிரி, சிங்கம், புலிகளையும் புடிச்சி அதுல இவங்க மொகத்த மார்ஃபிங் செஞ்சு படுத்துறாங்க.

நாளைய முதல் வாசகத்தை வாசிக்கும்போது இந்த ப்ளக்ஸ் போர்டுகள் தான் நினைவிற்கு வருகின்றன. தானியேல் தன் கனவில் நான்கு விலங்குகளைக் காண்கின்றார்:

1. கழுகின் இறக்கைகளை உடைய சிங்கம்
2. கரடி
3. வேங்கை அல்லது புலி வித் நான்கு இறக்கைகள்
4. அனாமிகா - ரொம்பவே டெரரா. கொம்பில் மனிதக் கண்கள்

முடிவு என்னன்னா? இந்த விலங்குகள் எல்லாம் அழிக்கப்படுகின்றன. மானிட மகன் தோன்றுகின்றார்.

இந்த நான்கு விலங்குகளும் நான்கு வகை அரசுகளைச் சித்தரிக்கலாம். அல்லது கோரத்தைக் காட்டும் உருவகங்களாக இவை இருக்கலாம்.

சிக்மண்ட் ஃப்ராய்ட் அவர்களின் எல்லா நூல்களின்மேலும் எனக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு உண்டு. அதிலும் 'கனவுகளின் விளக்கம்' (...) என்ற நூலில் எல்லாக் கனவுகளும் ஒரு செக்ஸிஸ்ட் அர்த்தம் கொடுக்கின்றார் அவர். அதாவது, நம் மனதில் இருக்கும் வன்முறை மற்றும் பாலுணர்வு என்னும் இரண்டுதாம் நம் கனவுகளில் வருகிறதாம்.

தானியேலின் கனவு அவர் காலத்தில் இருந்த வன்முறையின் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம்.
கனவுகள் ஆச்சர்யமானவை.

கனவுகள் தூய அகுஸ்தினாருக்கும் ரொம்ப பிடிக்கும்.

நாம் இரவில் காணும் கனவுகளில் வெறும் 5 சதவிகிதம்தான் அடுத்த நாள் நம் நினைவில் நிற்கிறது என்கிறார் உளவியலாளர்கள்.

அதிக கனவுகள் இரவில் வந்தால் நாம் அடுத்த நாள் மிகவும் சோர்வாக எழுந்திருக்கிறோம். ஏனெனில் இரவு முழுவதும் மூளை ஆக்டிவ்வா இருப்பதால்.


3 comments:

  1. 'உசிலம்பட்டியிலிருந்து மதுரை கோரிப்பாளையம் வரை'என்று பார்த்தவுடன் ஏதோ விஷயம் இருக்கிறது என்று நிமிர்ந்து உட்கார்ந்தேன்.ஆனால் தந்தை 'குபு குபு பாய்ஸ்' எனவும்,'டெர்ர் டெவில்ஸ்' எனவும் அடைமொழியோடு நம் மண்ணின் மைந்தர்கள் வைக்கும் சுய விளம்பர ஃப்ளக்ஸ்கள் பற்றிக் கூறி முடித்துவிட்டார். தானியேலின் கனவில் வரும் நான்கு வகையான மிருகங்கள் நம்மவர் வைக்கும் ஃப்ளக்ஸ் போர்டை ஞாபகப்படுத்துவதாகவும் சொல்கிறார்.முதல் ஏற்பாட்டில் வரும் கனவுகளுக்கெல்லாம் அழகாக, கோர்வையாக அரத்தம் சொல்லப்படுவது மட்டுமின்றி அவை நனவாக மாறுவதையும் காண்கிறோம்.ஆனால் ஏன் நம்காலத்தில் நம் கனவுகளின் அர்த்தத்தை எடுத்துரைக்க யாருமில்லை.நிறைவேறாத ஆசைகள் தான் கனவாக வருகிறதென்றால் பல நேரங்களில் நாம் நினைத்தே பார்த்திராத,நமக்கு சம்பந்தமே இல்லாத விஷயங்கள் வருகின்றனவே! எப்படி? கனவுகள் தூய அகுஸ்தினாருக்கு மட்டுமில்லை....எல்லோருக்குமே பிடிக்கும் நமக்கு வேண்டியவர்கள்,நமக்கு வேண்டிய விஷயங்கள் அந்தக் கனவுகளில் தெரிந்தால்.இலையெனில்...??!! கெட்ட கனவுகளினால் மன உளைச்சலுக்கு ஆளானவரகளும் இருக்கவே செய்கிறார்கள்.ஒரு நாளெல்லாம் நெற்றி வியர்வை தெறிக்க உழைத்து,உறங்கச் செல்பவர்களுக்கு கனவே வருவதில்லையாம்.இதிலிருந்து என்ன தெரிகிறது? கனவு சோம்பேறிகளுக்கும்,வெட்டிப்பொழுது போக்குபவர்களுக்குமே வருகிறது.நாம் இந்த இரண்டாம் வகையைச் சார்ந்தவர்கள் எனில் வரம்பில்லை.இந்த என் கருத்துக்காக தானியேலும்,புனித அகுஸ்தினாரும் என்னை மன்னிப்பார்களாக! தந்தையும் கூடத்தான்!!!

    ReplyDelete
  2. Dear Father,Very inspirational message on dreams.You have connected with appropriate observation of yours in first reading of tomorrows.

    One clarification What about the dream of St.Joseph regarding Jesus birth? After that dream only St.Joseph became very active.Took the Mary and child to other place.

    I believe on dreams.My conclusion regarding dreams are for good people good dream will come.,For bad people bad dream will come.

    Let us dream for good purpose as St.Joseph had.

    Congrats Fr.Yesu.

    ReplyDelete
  3. Let us be a blessed people and live righteously as St.Joseph and Daniel lived.Surely for all our dreams we will find meaning.

    ReplyDelete