நானிருந்த தேனியில நாளைக்கு திருவிழா.
கிறிஸ்து பிறப்பு பெருவிழா.
2011ஆம் ஆண்டு நடந்த அந்தத் திருவிழா இன்னும் மனதில் நீங்காமல் நிற்கிறது.
தேனி காணிக்கை அன்னை அருட்சகோதரிகள் பள்ளி வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, கிறிஸ்து அரசர் பவனியாக ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டார்.
'உலக மீட்பர் ஆலயம்' - இதுதான் தேனி பங்கு ஆலயத்தின் பெயர்.
அந்தத் திருவிழாவைவிட, திருவிழாவையொட்டிய நிகழ்வுகள்தாம் ஆச்சர்யமானவை.
வருவாரா, வருவாரா என்று காத்திருந்து கடைசி நிமிடத்தில் அவசர அவசரமாக வந்திறங்கிய அருட்பணியாளர்.
வருமா, வருமா என்று காத்திருந்து கடைசி நிமிடத்தில் வந்த கரண்ட்.
எல்லாமே அன்று சர்ப்ரைசாக இருந்தது.
நற்கருணை ஆராதனையோடு பவனி நிறைவுபெற்றது.
'இவர்தான் எங்கள் அரசர்' என்று ஊரறிய அவரை எடுத்துக்கொண்டு வந்ததும், ஊரே அவருக்கு மரியாதை செலுத்தியதும் மெய்சிலிர்க்க வைத்தது.
நம் ஊரில் காணப்படும் இந்த இறைநம்பிக்கையும், பக்தியும் தான் இன்று நம்மைத் தாங்கி பிடிக்கிறது.
கடந்த வாரம் தீவிரவாதத்தாக்குதல் பாரிசில் நடத்தப்பட்டவுடன், டுவிட்டரில் அவர்கள் இட்ட முதல் பதிவு, 'பாரீசுக்காக செபியுங்கள்' என்பதுதான். ஆலயங்களையும், செபங்களையும் கேலிப்பொருளாக்கி கார்ட்டுன் வரையும் அவர்களின் அறிவும் கூட அந்த நொடியில் இறைவனைத்தான் தேடியது. 'இறைவன் இல்லை' என்று சொல்லிய மெய்யியலார்கள் உருவானது பிரான்சில்தான்.
ஆனால், நாம் வைத்திருக்கின்ற பிடி தளரும்போது, அதைவிட பெரிய பிடி ஒன்று நமக்கு அவசியமாகிறது. அதுவே கடவுளாக இருந்துவிட்டால் இன்னும் நமக்கு பாதுகாப்பு.
அமைதியின் அரசர் இயேசு நம் உள்ளத்திலும், இல்லத்திலும் நிறையமைதி அருள்வாராக!

தந்தைக்கு வணக்கம்."அமைதியின் அரசர்" என்ற பதிவுக்கு நன்றி.கிறிஸ்த்து அரசர் திருவிழா வந்தாலே போதும் கிறிஸ்மஸ் நெருங்கி விட்டது என்று.தந்தைக்கு திருவிழா வாழ்த்துக்கள். நாம் வைத்திருக்கின்ற பிடி தளரும்போது, அதைவிட பெரிய பிடி ஒன்று நமக்கு அவசியமாகிறது. அதுவே கடவுளாக இருந்துவிட்டால் இன்னும் நமக்கு பாதுகாப்பு.மேற்கூறிய தங்களின் வார்த்தைகள் உண்மையானவையே.எப்போதும் பெரிய பிடியாகிய கடவுளை பற்றிக்கொள்ள அமைதியின் அரசரிடம் எல்லோருக்காகவும் வேண்டுவோம்.தந்தைக்கு பாராட்டுக்கள் !!!!
ReplyDeleteஇன்றையத் தலைமுறையினர் யாரை,எதற்காகத் தேடிப் போகிறோம் என்ற ஒரு குழப்பமான நிலையில் இருக்கும் கால கட்டத்தில் நமக்கு ஒரு 'அரசர்'...அவரே நம் 'கடவுள்.' நினைவே இனிக்கிறது.கண்களை மூடிக்கொண்டு யோசித்தால் ஒரு தென்றல் சுகமாகத் தோளைத் தொடும் உணர்வு. நமக்குத் தேவையான அத்தனையும் நம்மைச்சுற்றி வருகையில் 'இறைவன் எங்கே?' என்பதும்,நமது நாடி தளரும்போது இறைவனிடம் மண்டியிடுவதும் காலந்தொட்டு நடந்துவரும் நிகழ்வுதான்.ஒரு முறை நாம் பிடித்து விட்டால் நம்மைத் தொடர்ந்து கிடுக்கிப் பிடியில் வைத்திருப்பது 'அவரின் பிடி'தானே! விண்ணகமும்,மண்ணகமும் மண்டியிடும் அரசரை, அவரின் அமைதியால் நம் இல்லங்களையும்,உள்ளங்களையும் நிரப்ப வேண்டுவோம்.2011 ம் ஆண்டு தேனியில் தான் கொண்டாடிய கிறிஸ்து அரசர் திருநாளின் மலரும் நினைவுகள தந்தை இன்று நடந்ததொரு நிகழ்வு போல் விவரித்துள்ள விதம் அவர் உண்மையான " மண்ணின் மைந்தன்" என்பதைப் பறை சாற்றுகிறது.அனைவருக்கும் கிறிஸ்து அரசர் திருநாள் வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஅம்மாவுக்கு வணக்கம் மற்றும் கிறிஸ்து அரசர் பெருவிழா வாழ்த்துக்கள்.இன்று நான் பணிபுரியும் பொறியியல் கல்லூரிக்கும் நாமத் திருவிழா. ஆக,அனைத்து மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் உங்கள் ஜெபத்தில் சிறப்பாக நினைவு கூறுங்கள்.
Deleteநமக்கு ஒரு 'அரசர்'...அவரே நம் 'கடவுள்.' நினைவே இனிக்கிறது.கண்களை மூடிக்கொண்டு யோசித்தால் ஒரு தென்றல் சுகமாகத் தோளைத் தொடும் உணர்வு.அர்த்தமுள்ள வார்த்தைகள்.நன்றியும் பாராட்டுக்களும்.