Wednesday, November 11, 2015

இங்கே அங்கே

'இதோ, இங்கே! அதோ, அங்கே!'

இறையரசு எங்கே இருக்கிறது?

மற்றும்

மானிட மகன் எங்கே இருக்கிறார்?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் தருகிறோம் என்று சொல்பவர்கள், 'இதோ, இங்கே! அதோ, அங்கே!' என்று உங்களை அலைக்கழிக்கலாம். ஆனால் நீங்கள் அவர்கள் பின்னே செல்லாதீர்கள் என்கிறார் இயேசு.

'உங்கள் நடுவே இருக்கிறது!'

இந்தப் பதிலை நாம் கொஞ்சம் கவனமாக கையாள வேண்டும்.

இறையரசு பற்றிய கேள்வியை கேட்பவர்கள் பரிசேயர்கள். இந்தப் பதிலை நாம் அப்படியே எடுத்தால், 'இறையரசு பரிசேயர்கள் நடுவே இருக்கிறது!' என்பது போல ஆகிவிடும்.

நாளைய முதல் வாசகதத்தில் ஞானம் என்ற வார்த்தைக்கு அழகான மணிமகுடம் சூட்டி, அதை 'ஆற்றல், அறிவு, தூய்மை, தனித்தன்மை, நுண்மை, உயிர், தெளிவு' என அதில் முத்துக்களை பதிக்கின்றார் சாலமோன்.

இந்த மதிப்பீடுகள் எங்கே இருக்கிறதோ, அங்கே இறையரசு இருக்கும் என்று நாம் சொல்லலாமே!


3 comments:

  1. இறை வருகை காலம் நெருங்க,நெருங்க இறுதி நாட்களைப் பற்றிய விஷயங்கள் நம் செவிகளை வந்தடைகின்றன."இறையரசு உங்களிடையே இருக்கிறது"எனப் பரிசேயரைப்பார்த்து சொல்கிறார் இயேசு.இறையரசு எல்லோருக்கும் உரித்தான தென்றால் அது பரிசேயர் நடுவிலும் இருந்து தானே ஆக வேண்டும்? 'ஞானம்' என்ற வார்த்தைக்கு சாலமோன் தரும் விளக்கம் அளப்பரியது.தந்தை குறிப்பிட்டிருக்கும் மணிமகுடத்தின் முத்துக்களோடு ஞானம் என்பது கறைபடியாத கண்ணாடி,கதிரவனை விட அழகானது, விண்மீன் கூட்டத்திலும் சிறந்தது போன்ற ரூபி,எமரால்ட் எனும் விலையுயர்ந்த கற்களையும் பதித்திருக்கிறார் சாலமோன்.இந்த மதிப்பீடுகள் எங்கே இருக்கிறதோ..அங்கே 'இறையரசு'இருக்கும்...இறையரசு இருக்கும் இடம் தான் நாம் அனைவரும் இருக்க வேண்டிய இடம் என்று சொல்லலாமே! விலையுயர்ந்ததொரு பதிவைக் கொடுத்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. பாச தந்தைக்கு வணக்கம்.இன்றைய பதிவு மிகச் சிறியதாக இருந்தாலும் சொல்ல வேண்டியதை இங்கே அங்கெ என்று இழுத்தடிக்காமல் சாலமன் பதித்த முத்துக்களாகிய ஆற்றல், அறிவு, தூய்மை, தனித்தன்மை, நுண்மை, உயிர், தெளிவு' இந்த மதிப்பீடுகள் எங்கே இருக்கிறதோ, அங்கே இறையரசு இருக்கும் என்றும் இதில் மட்டுமே இருக்கிறது என்றும் நச்சென்று கூறியிருக்கிறீர்கள். தந்தைக்கு எனது நன்றியும் பாராட்டுக்களும்!

    ReplyDelete