Tuesday, April 11, 2017

என் சீடர்களோடு

'என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாட போகிறேன்'

(காண். மத்தேயு 26:14-25)

இயேசு இறுதிவரை பிறரைச் சார்ந்தவராகவே வாழ்கின்றார்.

தான் எருசலேமிற்குள் நுழையத் தேவையான கழுதையையும், அதன் குட்டியையும் அவிழ்த்து வருமாறு பணிக்கிறார் தம் சீடர்களை.

இன்று தன் பாஸ்காவை கொண்டாட இன்னொரு வீட்டில் இடம் தேடுகிறார்.

அதாவது, தன் தந்தை தனக்காக எல்லாவற்றையும் தயாராக வைத்திருப்பார் என்பதை இயேசு உறுதியாக நம்புகின்றார்.

நீங்களோ, நானோ இன்னொரு வீட்டில் போய் 'எனக்கு விருந்து ஏற்பாடு செய்ய இடம் கொடுங்கள்' என்று சொல்ல முடியுமா?

இல்லை என்றே நினைக்கிறேன்.

தன்னோடு இருப்பவர் தன்னைக் காட்டிக் கொடுக்கின்றார்.

தனக்கு முன்பின் தெரியாதவர் விருந்துண்ண இடம் தருகிறார்.

இப்படி பிண்ணப்பட்டதுதான் வாழ்க்கை என்பதை உணர்ந்தவர் இயேசு.

1 comment:

  1. "தன்னோடு இருப்பவர் தன்னைக் காட்டிக்கொடுக்கிறார்;தனக்கு முன்பின் தெரியாதவர் விருந்துண்ண இடம் தருகிறார்." ... வாழ்க்கையின் முரண்பாடே இதுதான்.இத்தகைய நிகழ்வுகள் நாமும் அன்றாடம் சந்திப்பது தான்.நம் கண்களே நம்மைக்குத்துவதும்,நமக்கு சம்பந்தமில்லாத கரங்கள் நம் கண்ணீர் துடைக்க முயல்வதும் கூட யதார்த்தமான ஒன்றுதான்.' மனுமகனும்' இதற்கெல்லாம் விதிவிலக்கல்ல என்று எடுத்தியம்புகிறது இன்றையப்பதிவு. "நரிகளுக்கு வலைகளும்,பறவைகளுக்குக் கூடுகளும் இருக்கையில் மனுமகனுக்கு தலைசாய்க்க இடமில்லை".... எனும் வரிகளும் மெய்யாகின்றன.ஆயினும் இறைமகன் தன் தந்தை தன்னைக்கைவிட மாட்டார் என்பதில் உறுதியாயிருக்கிறார்.இன்று நமக்கும் இதுதான் தேவை என்பதையும் நமக்கு உணர்த்துகிறார்.வானத்துப்பறவைகளுக்கும்,வயல்வெளிப் பூக்களுக்கும் வாழ்வளிப்பவர் நம்மையும் வாழவைப்பார் என உணர்த்த வருவதே இன்றையப் பதிவு.மனங்களில் நம்பிக்கை ஒளியேற்றும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு வாழ்த்துக்களும்! நன்றியும்!!!

    ReplyDelete