பன்றிகள்முன் முத்துக்கள்
இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது:
அ. பன்றிகள்முன் முத்துக்களை எறிதல்
ஆ. பொன்விதி
இ. குறுகிய வழி
இதில், 'அ' வை மட்டும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
'பன்றிகள்முன் முத்துக்களை எறிதல்'
யாராவது பன்றிகள் முன் முத்துக்களை எறிவார்களா? பன்றிகள் முன் முத்துக்களை எறியும் அளவுக்கு யாரிடமாவது முத்துக்கள் இருக்குமா?
இந்த வாக்கியத்தை நேரடிப் பொருளிலும், உருவகப் பொருளிலும் புரிந்துகொள்வோம்.
நேரடிப் பொருள்:
'தூய்மையானது எதையும் நாய்களுக்குப் போட வேண்டாம்'
'முத்துக்களை பன்றிகள்முன் எறிய வேண்டாம்'
இவ்விரண்டு வாக்கியங்களும் ஒருபோகு இணை வாக்கியங்களாக உள்ளன. அதாவது, முன்னதன் பொருளே பின்னதிலும் சொல்லப்படுகிறது. இயேசுவின் சமகாலத்தில், 'நாய்கள்' அல்லது 'பன்றிகள்' என அழைக்கப்பட்டவர்கள் புறவினத்தார்கள் அழைக்கப்பட்டனர். புறவினத்தார் என்றால் யாரோ ஒருவர் என நினைக்காதீர்கள். நீங்களும் நானும் புறவினத்தார்தான். யூதர்களைத் தவிர அனைவரும் 'நாய்கள்' அல்லது 'பன்றிகள்.'இயேசுவின் சமகாலத்து ரபிக்கள் நடுவே, 'உன் தங்க மோதிரத்தை பன்றியின் மூக்கில் அணிந்துவிடாதே!' என்ற வாக்கியமும் இருந்தது. இங்கே, 'தங்க மோதிரம்' என்பது 'இறைவாக்குகளை' குறிக்கிறது. ஆக, இறைவாக்குகள் புறவினத்தாருக்கு அறிவிக்கப்படக்கூடாது என்பதைச் சொல்வதாக இந்த வாக்கியம் இருக்கிறது.
உருவகப் பொருள்:
'முத்துக்களைப் பன்றிகள்முன் எறிதல்'
என்னிடம் விலைமதிப்பு என இருக்கின்ற ஒன்றை தூய்மையற்றதன்முன் எறிவது.
வாழ்க்கைப் பாடங்கள் இரண்டு:
அ. எனக்கு அடுத்திருப்பவரை நான் தாழ்வாக அல்லது இழிவாகக் கருதுவது தவறு.
ஆ. என்னிடம் மதிப்புக்குரியது என நான் கருதுவதையும், மதிப்புக்குரிய என்னையும் மதிப்பற்றவற்றின்முன் எறிவதும் தவறு.
ஆங்கிலத்தில், 'டியர்' என்ற ஒரு வார்த்தை உண்டு. இதற்கு, 'அரிது' என்ற பொருளும், 'நெருக்கம்' என்ற பொருளும் உண்டு. உலகில் 'அரிதாக' இருப்பவர்கள்தாம் நமக்கு 'நெருக்கமாக' இருக்க வேண்டும். நான் 'நெருக்கமாக' இருக்கும் ஒவ்வொருவருக்கும் 'அரிதாக' (மதிப்புள்ளதாக) இருக்க வேண்டும்.
கண்டிப்பாக மதிப்பான எப்பொருளும் அதன் மதிப்புத் தெரிந்தவரிடமே இருக்கவேண்டும். இலையெனில் நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்த கதையாகிவிடும்.’Dear’ … அரிது மற்றும் நெருக்கம். ‘Esteem’ என்று கூடப் பொருள் கொள்ளலாம்.அந்தந்தப் பொருளின்/ நபரின் மதிப்பறிந்து நடக்கவும்… அப்படி மதிப்பிற்குரியோரை நம்மவராக்கிக் கொள்ளவதும் மேலோரின் செயல்…. என்னச் சுற்றி இருப்பவர்கள் எனக்கும்…. நான் அவர்களுக்கும் அரிதான முத்தாகத் தெரிய என்ன செய்ய வேண்டும்? யோசிப்போம்! நல்லதொரு கருத்து. தந்தைக்கு நன்றி!!!
ReplyDeleteஅகம்