ஏழு முறை மீண்டும் சென்று
இஸ்ரயேல் மக்கள் பாகால் வழிபாடு செய்ததால் மழை பொய்த்துவிடுகிறது. எலியா இறைவேண்டல் செய்தவுடன் வானம் பொழியத் தொடங்குகிறது.
ஒரே முறையில் வானம் பொழிவதற்குப் பதிலாக, ஏழாம் முறையாகப் பணியாளன் சென்று பார்க்கும்போது உள்ளங்கை அளவு மேகம் மேலெழும்பி வருகிறது. உள்ளங்கை அளவு மேகம் சட்டென்று பெருமழையாகப் பொழிகிறது.
மனிதர்களின் பொறுமையைக் கடவுள் சோதிக்கும் நிகழ்வாகவும், அதே வேளையில் இறைவன் செயலை அனுபவிப்பதற்குக் காத்திருத்தல் தேவை என்று அறிவுறுத்தும் நிகழ்வாகவும் அமைந்துள்ளது.
நற்செய்தி வாசகத்தில் கடவுள் மனிதருக்காகக் காத்திருக்கும் நிகழ்வைப் பார்க்கின்றோம்.
கோவிலில் காணிக்கை செலுத்த வரும் ஒருவர் தன்மீது யாராவது ஒப்புரவு கொண்டிருக்கவில்லை எனக் கருதினால், காணிக்கையை அப்படியே வைத்துவிட்டுச் செல்லுமாறு அறிவுறுத்துகிறார் இயேசு. இங்கே கடவுள் காத்திருக்கின்றார் மனிதர்களின் ஒப்புரவுக்காக.
காத்திருத்தல் மற்றும் பொறுமை இன்று நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்.
நம் வாழ்விலும், உறவிலும் பரபரப்பு மிகவும் கூடிக்கொண்டே வருகின்றது.
ஏழு முறை சென்று கடலைப் பார்க்கும் அளவுக்குப் பொறுமை இருந்தால் இறைவன் நம் வாழ்விலும் பெருமழை பொழிவார்.
ஏழுமுறை சென்று கடலைப் பார்க்குமளவிற்கு பொறுமை இருந்தால் இறைவன் நம் வாழ்விலும் பெருமழை பெய்யச்செய்வார். கருணையும், பொறுமையும் நிறைந்த இறைவனை நம் வாழ்வின் ஊன்றுகோலாகப் பற்றிக் கொள்வோம்…..நம் வாழ்விலும் மழை பெருக்கெடுத்தோடும். தந்தைக்கு நன்றி!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஒரே முறையில் வானம் பொழிவதற்குப் பதிலாக, ஏழாம் முறையாகப் பணியாளன் சென்று பார்க்கும்போது உள்ளங்கை அளவு மேகம் மேலெழும்பி வருகிறது
ReplyDelete//This is why I have trust issues when it comes to God