Thursday, May 31, 2018

சந்திப்பு

நாளைய (31 மே 2018) நற்செய்தி (லூக்கா 1:39-56)

சந்திப்பு

நாளை மரியாள் எலிசபெத்தைச் சந்தித்த திருநாளைக் கொண்டாடுகிறோம்.

இன்றைய நாளின் நற்செய்திப் பகுதியில் வரும் எலிசபெத்தின் வார்த்தைகள் என்றும் என்னைக் கவர்பவை. வயது கூட கூட வார்த்தைகள் குறையும். வார்த்தைகளில் முதிர்ச்சி இருக்கும். இல்லையா?

'பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்.
உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!
என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?
உம் வார்த்தை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று.
ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'

ஒவ்வொரு வாக்கியமாகப் பார்ப்போம்:

'பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்' என்று இளவல் மரியாவை வாழ்த்துகிறார். தனக்கே கடவுளின் அரும்பெரும் செயல் நடந்திருந்தாலும், தானே ஆசி பெற்றவராக இருந்தாலும், தன்னைவிட மரியாள் சிறியவராக இருந்தாலும், அவரிடம் கடவுள் நிகழ்த்திய செயலை முதன்மைப்படுத்தி, மரியாளை ஆசி பெற்றவர் என்கிறார். இது எலிசபெத்தின் பரந்த மனம்.

'உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!' - குழந்தையைப் பற்றி எதுவும் மரியா சொல்லாமNலேய எலிசபெத்துக்கு எப்படி எல்லாம் தெரிந்தது? இது அவருடைய நுண்ணறிவு.

'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? - இயேசுவைத் தன் ஆண்டவராக எடு;த்துக்கொள்கிறார். மீட்பு வரலாற்றை ஒரே நொடியில் நீட்டிப் பார்க்கிறார். இது அவருடைய மேலாண்மை அறிவு.

'என் வயிற்றில் குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது' - தன் உள்ளத்தின், உடலின் உணர்வுகளை முழுமையாக அறிந்த அறிவாளி.

'ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என நம்பிய நீர் பேறுபெற்றவர்' - இந்த இடத்தில் இவர் தன் கணவன் செய்த தவறை மனதில் நினைத்திருப்பார். ஆண்டவர் சொன்னதை என் கணவர் நம்பல. ஊமையா கிடக்குறார். ஆனா, நீ நம்புன - என்று மரியாளின் நம்பிக்கையைப் புகழ்கிறார்.

குழந்தையைக் கருத்தரிக்கும்போது அதன் தாய் வளர்சிதை மாற்றத்திற்கு ஆளாகிறார் என்பது நாம் அறிந்ததே. இது பெரிய வலியைத் தாய்க்குத் தரும். இப்படிப்பட்ட வலியிலும் இவர் மகிழ்ச்சியோடும், தன் அருகில் இருக்கும் மரியாளும் மகிழ்ச்சி கொள்ளவும் காரணமாக இருக்கின்றார்.

மகிழ்ச்சி - இது சந்திப்பின் உணர்வு.

1 comment:

  1. " உறவு" ..அதிலும் இரு பெண்களுக்கிடையே இழையோடும் உன்னதமான உறவைக் குறித்த எத்துணை அழகான பதிவு! ஒரு உறவின் அத்தனை கோணங்களையும் அழகாக சிலாகித்திருக்கிறார் தந்தை." பெண்களுக்குள் "... என்று தொடங்கிப் " பேறுபெற்றவர்" என முடியும், மரியாளுக்காக எலிசபெத் வழங்கிய வாழ்த்துப்பத்திரம்.எலிசபெத்தின் பரந்த மனம்,நுண்ணறிவு, மற்றும் மேலாண்மை அறிவையும்,தன் உடல் மற்றும் உள்ளத்தின் அனைத்து உணர்வுகளையும் அறிந்த அறிவாளி என்பதையும் தாண்டி மரியாளின் இறைநம்பிக்கையை உலகிற்கு உரக்கச்சொல்லும் கருவியாகவும்,ஏன்... மரியாளின் மகிழ்ச்சிக்கே காரணி எலிசபெத்து தான் என்பதையும் பறைசாற்றுகிறது. . சிலசமயங்களில் எலிசபெத்தை மரியாளுக்கு நிகராக்க்கூட நினைக்கத்தோன்றுகிறது." மகிழ்ச்சி- இது சந்திப்பின் உணர்வு" என்பது மறுக்க இயலாத உண்மை." வயது கூடக்கூட வார்த்தைகள் குறையும் என்பதும்,வார்த்தைகளில் முதிர்ச்சி இருக்கும்....இருக்க வேண்டும்" என்பதும் இன்றையப் பதிவு எனக்கு உணர்த்தும் பாடம்..எல்லா ஆண்களும் தந்தையின் ரேஞ்சுக்கு இல்லாவிடினும் தங்களைச்சுற்றியுள்ள பெண்களை சிறிதேனும் புரிந்து கொண்டால் எத்துணை நலம்! பெண்மையின் மென்மை போற்றும் பதிவிற்காகத் தந்தைக்கு வாழ்த்துக்களும்!! நன்றிகளும்!!!

    ReplyDelete