Wednesday, May 16, 2018

இடம் பொருள் ஏவல்

ஆயிரத்தவர் தலைவர் முன் நிற்கின்ற பவுல் அந்த இடத்தில் கூடியிருந்த நபர்கள் பரிசேயர்கள், சதுசேயர்கள் என இரண்டு குழுவினராக இருப்பதை உய்த்துணர்கின்ற பவுல், 'நான் ஒரு பரிசேயன்' என அறிக்கையிடுகின்றார்.

இவர் ஒரு பக்கம் சார்ந்து பேசுகிறார் என்பதாக நினைத்து சதுசேயர் அணி வெகுண்டெழுகிறது.

இவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை நடக்க பவுல் தப்பிவிடுகின்றார்.

ஆக, வாய் உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்பது பவுலின் விடயத்தில் உண்மையாகிறது.

பவுலை பிய்த்துக்கொண்டு போகும் அளவிற்கு பிரிவினை வந்துவிடுகிறது.

ஆனால்,

இறுதியில், 'துணிவோடிரும்!' என ஆண்டவர் அவர் அருகில் நிற்கின்றார்.

இதுதான் வாழ்க்கை.


1 comment:

  1. இன்றைய நாட்டு நடப்பை எடுத்துச் சொல்லும் ஒரு பதிவு. என்னதான் மனசாட்சி, கொள்கைப்பிடிப்பு போன்ற விஷயங்கள் எல்லாம் ஒரு புறமிருப்பினும் ஊரோடும்,ஊரில் உள்ளவர்களுக்கு ஏற்றார்போலும் கொஞ்சம் நெளிவு சுளிவோடு செயல்படுவது சிலசமயங்களில் தேவைப்படுகிறது. இல்லையெனில் அவன் 'பிழைக்கத்தெரியாதவன்' என்ற பட்டத்திற்குச் சொந்தக்காரராகி விடுவோம்.இது ஒருபுறமெனில் நம் நெளிவு,சுளிவுகளையும் மீறி 'அவரைச்'சார்ந்திருப்போருக்கு அவரது அருட்கரம் துணை நிற்கும்; 'அவர்' அசரீரியாக அவர்களுக்கு ஒலிப்பார் என்பது தூய பவுலின் வழியாக இன்றையப்பதிவு நமக்குணர்த்தும் பாடம். கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பதை மெய்ப்பிக்கும் தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete