Monday, May 28, 2018

இவற்றோடு கூட இன்னல்களையும்

நாளைய (29 மே 2018) நற்செய்தி (மாற் 10:28-31)

இவற்றோடு கூட இன்னல்களையும்

பேதுரு இயேசுவிடம், 'பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே' என்றார். (காண். மாற் 10:28)

தாங்கள் அனைத்தையும் இயேசுவுக்காக விட்டுவிட்டு வந்ததை இங்கே அவருக்கே நினைவுபடுத்துகின்றார் பேதுரு. இயேசுவும் விட்டுவிட்ட அனைத்தும் 100 மடங்கு கிடைக்கும் என வாக்குறுதி தருகின்றார். இந்த வாக்குறுதியில் மாற்கு நற்செய்தியில் மட்டுமே, 'இவற்றோடு கூட இன்னல்களையும்' என்ற சொல்லாடல் உள்ளது.

எங்கெல்லாம் நற்செய்திப்பகுதியில் நெருடல் இருக்கிறதோ அங்கெல்லாம் உண்மை இருக்கிறது என்பது நற்செய்தி விளக்கத்திற்கான அடிப்படை விதி.

இயேசு சொல்வதுபோலவே அவரைப் பின்பற்றுபவர்களுக்கு 100 வீடுகள், சகோதரர்கள், சகோதரிகள், தாய், தந்தை, பிள்ளைகள், நிலபுலன்கள் கிடைக்கின்றன. 100க்கு மேலேயும் கிடைக்கின்றன. ஆனால், இவற்றோடு கூட இன்னல்கள் என்று இயேசு எதைச் சொல்கிறார்? இயேசுவின் சமகாலத்தில் குருத்துவம் இல்லை. ஆக, இயேசுவின் இந்த வாக்குறுதி குருக்கள் மற்றும் துறவிகளுக்கானது என்று எண்ணத் தேவையில்லை. இயேசுவைப் பின்பற்றும் அனைவரும் இதைப் பெறுவர். இது ஒரு உருவகம்தான். அதாவது, இயேசுவில் அனைவரும் அனைவரோடும் இணைக்கப்பெறுவர் என்பதே பொருள்.

இயேசு சொல்லும் 'இன்னல்' என்பதன் பொருள் என்ன?

இன்னல்கள் என்பவை சீடர்கள் வெளிப்படையாக அனுபவிக்கின்ற துன்பங்கள் என்றாலும்கூட, ஒவ்வொரு சீடரின் உள்ளத்திலும் எழுகின்ற 'தெரிவு' (சாய்ஸ்) என்பதுதான் அந்த இன்னல்.


1 comment:

  1. "எங்கெல்லாம் நற்செய்திப் பகுதியில் நெருடல் இருக்கிறதோ அங்கெல்லாம் உண்மை இருக்கிறது என்பது நற்செய்தி விளக்கத்திற்கான அடிப்படை விதி" இதை மெய்ப்பிப்பதாக இருக்கிறது இயேசு பேதுருவிடம் கூறும் வார்த்தைகள்."இயேசுவைப்பின் பற்றுபவர்களை இன்னல்கள் தொடர்ந்திடினும் அவர்கள் மறுவாழ்வில் நிலை வாழ்வு பெறுவர்" என்பது நெருடலுக்குள்ளே பொதிந்துள்ள உண்மை என்பதை உணரமுடிகிறது." இன்னல்கள்" எனும் வார்த்தைக்குத் தந்தை கொடுக்கும் விளக்கம் மட்டுமல்ல; அந்த " சாய்ஸ்" எனும் ஆங்கில வார்த்தைக்குத் தந்தை தரும் " தெரிவு" எனும் மொழிபெயர்ப்பு கூட அழகானது. தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete