அறநெறி இயலில் 'நோக்கம்' மற்றும் 'வழி' என்று இரண்டு வார்த்தைகள் உண்டு.'சென்னைக்குச் செல்வது' என் நோக்கம் என வைத்துக்கொள்வோம்.
அதற்கு வழியாக இருப்பது 'பேருந்து,' அல்லது 'இரயில்,' அல்லது 'விமானம்'.
வழி மட்டுமே நோக்கம் ஆகிவிடக்கூடாது.
பேருந்திலேயே நான் இருந்துவிட்டால் நான் சென்னையை அடைய முடியாது.
'நோன்பு' என்பது வழி என்றும், 'நோக்கம்' என்பது இறைவன் என்றும் சொல்கிறது நாளைய நற்செய்தி வாசகம்.
இந்தத் தவக்காலத்தில் நாம் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டிய இரு முக்கிய வார்த்தைகளை நம் முன்னே வைக்கிறார் தந்தை. "நோக்கம்"என்ற ஒன்று இருப்பவனுக்கு அதை அடையும் "வழி"யும் தெரிந்தாக வேண்டுமென்பது நடைமுறை உண்மை. " இறைவன்" என்ற இலக்கை அடைய " நோன்பு" எனும் வழி எத்துணை முக்கியம் என்பதை நாம் அன்றாடம் செய்யும் எளிய பயணத்தின் துணையோடு தந்தை விவரித்துள்ள விதம் " கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது" என்பதைக் காட்டுகிறது. தந்தைக்கு வாழ்த்துக்கள்! நாளை தவக்காலத்தின் முதல் வெள்ளி.இயேசுவின் திரு இருதயம் நம் அனைவரையும் தம் அன்பால் நிரப்பிக் காப்பதாக!!!
ReplyDeleteVery simple and sweet reflection
ReplyDelete