Monday, March 6, 2017

மிகுதியாக பேசுவதால்

இன்று நிறையப் பேர் 'வார்த்தை சிக்கனம்' (எகானமி ஆஃப் வேர்ட்ஸ்) பற்றி பேசுகிறார்கள்.

இதற்கு நல்ல உதாரணம் டுவிட்டர். 142 எழுத்துக்களுக்குள் நாம் எண்ணுவதை இதில் பதிவு செய்ய வேண்டும். எழுத்தில்லாத இடைவெளி கூட இங்கே எழுத்தாக மட்டுமே கருதப்படும்.

'புறவினத்தார் மிகுதியாகப் பேசுவதால் தங்கள் செபம் கேட்கப்படும் என நினைக்கின்றனர்' என்று சொல்லும் இயேசு, 'நீங்கள் இப்படி செபியுங்கள்' என மிக சுருக்கமாக சொல்லித் தருகின்றார்.

இயேசுவின் செபத்தை இன்று நாம் வெகு எளிதாக சுருக்கிவிட்டோம்.

அதை சில நேரங்களில் மந்திரப் பொருளாக்கிவிடுகிறோம்.

10 முறை இந்த செபத்தைச் சொன்னால், 100 முறை இதை எழுதினால் இப்படி நடக்கும், அப்படி நடக்கும் என நினைக்கின்றோம். இப்படி நினைப்பது தவறு. ஏனெனில் நாம் இப்படிச் செய்யும்போது மிகுதியான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். மிகுதியான வார்த்தைகளைத்தான் கடிந்துகொள்கிறார் இயேசு.

இயேசுவின் செபம் மேல்நோக்கி எழுப்பப்பட வேண்டிய செபம் அல்ல.

மாறாக, ஒருவர் மற்றவரோடு நேர் நோக்கி வாழ வேண்டிய வாழ்க்கைப் பாடம்.


1 comment:

  1. ஆமாம்...சில சமயங்களில் வாட்ஸ்அப் போன்ற விஷயங்களில் வரும் செபங்கள் 10,20 பேருக்கு அனுப்பியாக வேண்டும் என்னும் கண்டிப்புடன் வருவது நாம் அறிந்ததே. ' செபம்' என்பதன் அர்த்தம் புரியாமல் பிதற்றுவது என்று இயேசு சாடுவது இதைத்தானோ என நினைக்கத்தோன்றுகிறது." நாம் கேட்பதற்கு முன்னரே நம் மனமறிந்து,தேவையறிந்து கொடுக்கக்கூடிய தந்தைக்கு" நாம் ஒருமுறை கேட்பதே அதிகம்.பின் எதற்காகப் பிதற்ற வேண்டும்? " விண்ணுலகில் உள்ள எங்கள் தகப்பனே!" ...இதற்கு மேல் என்ன வேண்டும் நம் மனத்தை அவரை நோக்கித்திருப்ப? சரியாகச் சொல்கிறார் தந்தை...ஆம்! இந்த "இயேசுவின் செபம்".. ஒருவர் மற்றவரின் முகம் பார்த்து,கைகோர்த்து சொல்ல வேண்டிய செபம்.அன்றன்று நமக்குத் தேவையான உணவைக்கேட்பதில் தொடங்கி நாம் பிறர் குற்றம் மன்னிப்பது போல் அவரும் நம் குற்றம் மறந்து,மன்னிக்க வேண்டும் என இறைஞ்சும் வாழ்க்கைப்பாடம்.இதன் பொருளுணர்ந்து சொல்வோம்.அழகான,பொருள் செறிந்த ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete