'அவருடைய நேரம் இன்னும் வரவில்லை'
நேரம் பற்றிய புரிதலை 'க்ரோனோஸ்' மற்றும் 'கைரோஸ்' எனப்படும் இரண்டு கிரேக்க பதங்களில் வழங்குகிறது இரண்டாம் ஏற்பாடு. க்ரோனோஸ் என்பது கடிகார அல்லது நாள்காட்டி நேரம். கைரோஸ் என்பது வாழ்வியல் நேரம் - பிறப்பு, இறப்பு, உடல்நலம், நோய் போன்றவற்றை குறிப்பவை.
இன்றைய நற்செய்தியில் பயன்படுத்தப்படும் வார்த்தை 'கைரோஸ்'
இந்த வார்த்தையைத்தான் சபை உரையாளயர் பயன்படுத்துகின்றார்: 'ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உண்டு.'
இயேசுவுக்கு நேரம் நல்லா இருந்ததால் கொலை செய்ய தேடியவர்கள் நடுவிலும் அவரால் நடக்க முடிகிறது.
எல்லாம் நேரப்படியே நடந்தால் நாம் ஏன் உழைக்க வேண்டும்?
அல்லது
என் வாழ்வை நான் செதுக்குகின்றேனா?
இந்த இரண்டுமே என்றும் தொடரும் டென்ஷன்.

'க்ரோனோஸ்',மற்றும் 'கைரோஸ்' நேரத்தைச் சொல்லும் புதிய வார்த்தைகள்.ஆமாம்.....விதைக்க ஒரு காலம்; அறுக்க ஒரு காலம். சிரிக்க ஒரு காலம்; அழ ஒரு காலம்.இப்படி விஷயங்கள் மாறி மாறி வருவதால்தான் வாழ்க்கையை "அடுத்து என்ன; அடுத்து என்ன?" என்ற ஒருவித எதிர்பார்ப்புடன் ஓட்ட முடிகிறது. எல்லாம் நேரப்படி நடக்க நாம் உழைத்தேயாக வேண்டும் என்பதையும்,, என் வாழ்வை நான் செதுக்கும் முறையும் 'அவரின்' உதவியோடு என் விருப்பு,வெறுப்பில் தான் அடங்கியுள்ளது என்பதையும் புரிந்து கொண்டால் "டென்ஷன்" எதற்குத் தந்தையே!? இயேசுவுக்குக் கூடி வந்த நேரம் நமக்கும் கூடி வரும் அவர் நம் அருகில் இருப்பதை நாம் நம்பினால்.........!!! நம்புவோம்!!!
ReplyDelete