Wednesday, March 29, 2017

மறந்ததால்

நாளைய முதல் வாசகத்தின் (காண். விப 32:7-14) முதலிலும், இறுதியிலும் 'மறந்து' என்ற வினைச்சொல் கையாளப்படுகிறது.

இஸ்ரயேல் மக்கள் யாவே இறைவனை மறந்ததால் தங்களுக்கென பொன்னாலான கன்றுக்குட்டி ஒன்றை செய்துகொள்கின்றனர்.

யாவே இறைவன் இஸ்ரயேல் மக்களை மறந்ததால் அவர்களை அழிக்க நினைக்கின்றார்.

இவர்களுக்கு இடையே பொது ஆளாக இருப்பவர் மோசே.

இதுதான் மோசேயின் முக்கியத்துவம்.

கடவுளுக்கும், மனிதர்களுக்கும் இடையே நிற்கும் அவர் மனிதர்களுக்கு ஆதரவாக சான்று பகர்கின்றார். 

1 comment:

  1. இந்தப் பதிவின பின்புலத்தைப் படித்துப்பார்த்தேன்.இறைவனுக்கெதிராகப் பொன்னாலான கன்றைச் செய்து வழிபட்ட மக்களின் நன்றி மறந்த தன்மையை நினைத்து யாவே இறைவன் அவர்கள் மீது சினம் கொள்ள அவர்களுக்காக ஒரு தாயின் நிலையிலிருந்து மோசே இறைவனிடம் பரிந்து பேசுகிறார்." இம்மக்கள் மீதுள்ள கடுஞ்சினத்தை மாற்றிக்கொள்ளும்; அவர்கள் மீது வெகுண்டெழாதேயும்; அபிரகாமையும்,ஈசாக்கையும்,இஸ்ரவேலையும் நினைவுகூறும்" என்றெல்லாம் மன்றாடுகிறார்.இறைவனும் மோசேயின் நிமித்தம் தன் சினத்தை மாற்றிக்கொள்கிறார்.நம் வாழ்வின் துயரமான நேரங்களில் நமக்கொரு மோசே கிடைக்கவும், நம்மைச் சுற்றியிருப்பவரின் துயர நேரங்களில் நாமே மோசேயாக மாறி அவர்களின் துயர் துடைக்கவும் இறைவனிடம் வரம் கேட்போம்.நல்லதொரு மனத்தை உருக்கும் பதிவிற்காக தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete