Friday, March 10, 2017

மற்றவர்களுக்கும் மேலாக

'நீங்கள் மற்றவர்களுக்கும் மேலாகச் செய்துவிடுவது என்ன?'

நாம் நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நம்மையே மற்றவரை விட ஒருபடி உயர்த்தி நினைத்துக்கொள்கின்றோம் - ஏதோ ஒரு வகையில்.

சில நேரங்களில் நம்மால் மற்றவர்களின் உயரத்திற்கு வரமுடியவில்லையே என்ற ஆதங்கமும் இருக்கிறது.

இந்த இரண்டிற்கும் இடையே உள்ள இழுபறி நிலையில்தான் வாழ்க்கை நகர்கிறது.

பெரிய பெரிய விடயங்களில் மற்றவர்களைவிட உயர்ந்து நிற்கும் நாம் சில நேரங்களில் சின்ன சின்ன விடயங்களில் மற்றவர்களைவிட தாழ்ந்துவிடுகின்றோம். அல்லது மற்றவர்களைப் போல இருந்துவிடுகின்றோம்.

நம்மை அன்பு செய்பவர்களை நாம் அன்பு செய்தால் போதும்,

நமக்கு வணக்கம் சொல்பவர்களுக்கு நாம் வணக்கம் சொன்னால் போதும்,

நம்மிடம் மற்றவர்கள் எதிர்பார்ப்பதை நாம் செய்து முடித்தால் போதும்.

இப்படிப்பட்ட நேரங்களை எல்லாம் சுட்டிக்காட்டும் இயேசு, கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஒரு படி செல்லச் சொல்கின்றார்.

அதுதான் மகிழ்ச்சிக்கான வழியும்கூட.

இன்னும் கொஞ்சம் அதிக தூரம் வாழ்க்கையில் நடக்கப் பார்க்கலாமே!


1 comment:

  1. எளிய வார்த்தைகளில் சொல்லப்பட்ட பெரிய விடயம். " பெரிய பெரிய விடயங்களில் மற்றவர்களைவிட உயர்ந்து நிற்கும் நாம், சில நேரங்களில் சின்னச் சின்ன விடயங்களில் மற்றவரை விடத் தாழ்ந்து விடுகிறோம்." உண்மைதான்...சிந்தனைக்குட்படுத்த வேண்டிய விடயம்தான்." நல்லோர் மேலும்,தீயோர் மேலும் கதிரவனை உதிக்கச்செய்பவரும், நேர்மையுள்ளோர் மேலும்,நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்பவரும்" நம்முடன் இருக்கையில் நாம் இன்னும் ஒருபடி மேலே சென்று மகிழ்ச்சிக்கான வழியைத் தொடலாமே! தந்தையின் வார்த்தைகளுக்கு செவிமடுப்போம்; வாழ்க்கையில் கொஞ்சம் அதிக தூரம் நடக்க முயற்சிப்போம்! தந்தையின் யோசனைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete