Tuesday, March 28, 2017

நானாக எதுவும்

'நானாக எதுவும் செய்ய இயலாது!'

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் பணியில் தன் தந்தை இருக்கும் உடனிருப்பைப் பற்றி பேசுகின்றார்.

இன்று 'எல்லாமே நான்' அல்லது 'எல்லாமே நான் மட்டும்' என்ற நிலை இருக்க வேண்டும் மேலாண்மையில் முதன்மைப்படுத்தப்படுகிறது.

இயேசு ஒரு மாற்று மேலாண்மையை முன்வைக்கின்றார்:

'அடுத்தவர் இருப்பதால் நான் இருக்கிறேன்'

அல்லது

'நாம் இருப்பதால் நான் இருக்கிறேன்'

இந்தக் கூட்டு ஆற்றல் அல்லது இயக்கம் நம் குடும்பங்களுக்கும், சமுதாயத்திற்கும், திருச்சபைக்கும் நல்ல பாடம்.

2 comments:

  1. ஏழு ஸ்வரங்களின் கலவைதான் 'இராகம்', 'பாடல்' என்பது எத்தனை உண்மையோ,அத்தனை உண்மை ....ஒரு கூட்டு முயற்சியில்,ஒரு கூட்டு வாழ்வில் அதன் அங்கத்தினர் ஒவ்வொருவரின் 'உடனிருப்பும்' என்பது.இது குறித்த இயேசுவின் கருத்து, தந்தை தன் ஆளுமைக்குட்பட்ட 'மேலாண்மைப் பிரிவிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறதென்பதை முன் மொழிகிறார்;. அதற்கான தாரக மந்திரம் 'நான்' என்பது 'நாம்'ஆக வேண்டுமெனவும் குறிப்பிடுகிறார்.ஒரு எழுத்து தானே! முயன்றால் முடியாது என்றுண்டோ? முயல்வோம்.....ஒரு 'சிப்பிக்குள் முத்தாகப்' பார்க்கிறேன் இன்றையப் பதிவை.தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Kavitha michael3/29/2017

    நான் நாமாக மாற முயற்சிப்போம்!!!!.நன்றியும் பாராட்டுக்களும் அருமைத்தம்பி கருணாவுக்கு

    ReplyDelete