Monday, February 8, 2016

ஆண்டவரின் உறைவிடம்

நாளைய முதல் வாசகத்தில் (1 அரச 8:22-23, 27-30) எருசலேம் ஆலயத்தில் சாலமோன் அரசர் செபிக்கும் செபத்தை வாசிக்கின்றோம்.

சாலமோன் தான் எருசலேமில் யாவே இறைவனுக்கு முதன்முதல் ஆலயம் எழுப்புகின்றார். மேலும், சாலமோனின் செபம் மற்றொன்றையும் நமக்கு சொல்கிறது. அதாவது, தொடக்கத்தில் அரசர்களே குருக்களாகவும் பணி செய்திருக்கின்றனர். ஆகையால்தான், சாலமோன் அரசர் தம் கைகளை மேலே உயர்த்தி ஆண்டவரிடம் மன்றாடுகின்றார்.

திபா 84ல் நாம் ஆண்டவரின் ஆலயம் பற்றி வாசிக்கின்றோம்.


'வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாட்களிலும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது...என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே மேல்!'

இந்த பாடல் தாவீதுக்கு உரியது என சொல்லப்பட்டாலும், தாவீதின் காலத்தில் ஆலயம் இல்லை. ஆக, தாவீது ஏதாவது ஒரு சிற்றாலயத்தை நினைத்து பாடியிருக்கலாம். அல்லது வேறொரு அரசர் பிற்காலத்தில் பாடி, அந்தப் பாடல் தாவீதுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கலாம்.

எல்லா மக்களையும் ஆளும் அரசனே ஆலயத்தில் வாட்ச்மேனாக இருக்க ஆசைப்படுகிறார் என்றால் இங்கே ஆலயத்தின் மேன்மை நாம் உணர்கிறோம்.

ஆலயங்கள் நமக்கு என்றும் ஆச்சர்யமாக இருக்கின்றன.

புதிய ஆலயத்திற்குள் நாம் நுழையும்போதெல்லாம் மூன்று மெழுகுதிரிகள் - எல்லாருக்கும், சிலருக்கும், நமக்கும் - ஏற்ற வேண்டும் என்று சொல்வார் பவுலோ கோயலோ.

ஆலயங்கள் எப்படி மக்களை இணைக்கின்றனவோ, அப்படியே பிரிக்கவும் செய்வதுதான் வேதனை.

இங்கே அவர்கள் நுழையக்கூடாது, இவர்கள் நுழையக்கூடாது.

இது புனிதம். அது தீட்டு.

இப்படி மனிதர்களை பிரிப்பதற்குத்தான் ஆலயம் என்றால், அங்கே நாமும் வாட்ச்மேனாக இருக்க வேண்டுமா என்ன?

3 comments:

  1. எத்துணை அழகான வரிகள்!...." வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாட்களிலும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது....என் கடவுளது இல்லத்தின் வாயிற் காப்பாளனாய் இருப்பதே மேல்!" ஒரு நாட்டை ஆளும் அரசனே அவ்விடத்தின் குருவாகவும் இருந்திருக்கிறார் என்பது மட்டுமல்ல... அவர் தன் கைகளை உயர்த்தி ஆண்டவரிடம் மன்றாடி இருக்கிறார் என்பதும் , அவரே அந்தக் கோவிலுக்கு காவலராய் இருக்க விரும்பியிருக்கிறார் என்பதும் படைத்தவன் முன்னே அவர் தான் ஒன்றுமில்லை என்பதை உணர்ந்துள்ளார் என்று காட்டுகிறது. இன்று மனிதர்களிடையே உள்ள பல ஏற்றத்தாழ்வுகள் ஆலயத்தைப் பலருக்கு எட்டிக்காயாக்க் காட்டுகிறது.இவ்விஷயத்தில் தந்தையின் குமுறலும் கூட நியாயமானதே! ஆனால் படைப்புக்களின் அறியாமைக்குப் படைத்தவன் யாது
    செய்வான்?பதிவில் வரும் ஒரு குறிப்புக்காகத் தந்தைக்கு 'சபாஷ்!' சொல்லத்தோன்றுகிறது.அந்த மூன்று மெழுகுதிரிகளுக்காக! ஒரு திருத்தம்....புதிதாக நுழையும் கோவிலுக்குள் என்பதற்குப்பதில் ஒவ்வொரு முறை கோவிலுக்குள் நுழையும் போதும் என்றிருந்திருக்கலாம்.ஏற்றிப்பார்த்தவர்களுக்கு மட்டுமே அது தரும் ஆனந்தம் புரியும். நல்லதொரு திருப்பாடலை முணுமுணுக்கச் செய்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. GITANJALI A BERNARD, CHENNAI

    Dear Fr Y. K.:

    - Your reflections on Jerusalem temple brought to my mind a Tamil movie song, "koil enpathum alayame": Lyrics by Kannadasan and voice given by TMS. Yester years' RCA recording is still inspiring to listen to.
    - You say that Solomon as a ruler continued to pray for his people, you say. Oh, things are different now: our rulers are so pious or impious that they prey upon us...without a break.
    - My knowledge of Tamil kings and their kingdoms are very limited; but in my native state in Tamilnadu's neighborhood, the ruling rajahs declared themselves as "dasas - servants" of Lord Padmanabha and were "watchmen" of their temples.
    - Solomon as King built the Temple of Jerusalem. But in our native lands, it is the priestly class who build most of "the temples". May be, if the "temples" were a. built by the kings/civil rulers and b. were manned and managed by them, their "watchman-dasa-spirituality-values" might have ably broken down all the walls we have cleverly built to separate us from each other.

    ReplyDelete
  3. Dear Father,Congrats for the good reflection on "How lovely is your dwelling place o,Lord".And thanks too.

    ReplyDelete