Monday, February 8, 2016

இரண்டையும்

'குருக்கள் தூயகத்தினின்று வெளியே வருகையில் ஒரு மேகம் ஆண்டவரின் இல்லத்தை நிரப்பிற்று. அம்மேகத்தின் பொருட்டு குருக்கள் திருப்பணி புரிய இயலவில்லை.' (1 அரச 8:1-7, 9-13)

'இயேசு சென்ற ஊர்களெல்லாம் உடல்நலம் குன்றியோரை பொது இடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.' (மாற்கு 6:53-56)

இந்த இரண்டு இறைவாக்குப் பகுதிகளையும் அருகருகே வைத்துப் பார்ப்போம்.

'குருக்களால் பணி செய்ய முடியவில்லை.'

'இயேசுவைத் தேடி மக்கள் ஓடி வருகிறார்கள்.'

அருட்பணி வாழ்வென்றாலும் சரி, நாம் செய்கின்ற ஆசிரியப்பணி, கல்விப்பணி, வங்கிப்பணி, அல்லது எந்த பணியாhனாலும் சரி, நம் எல்லாருக்கும் இந்த இரண்டு நிலைகளும் வரும்.

சில நேரங்களில் நம்மால் பணி செய்யவே இயலாமல் இருக்கும். ஏன்டா இந்த வேலையைத் தேர்ந்து கொண்டோம் என்று கூட இருக்கும்.

சில நேரங்களில் எல்லாம் நல்லாதக நடக்கும். ஓடியாடி வேலை செய்வோம். எல்லாரும் நம்மைத் தேடி ஓடி வருவார்கள். நம் முகத்தையாவது பார்க்க, நம் மேலாடையையாவது தொட முயற்சி செய்வார்கள்.

இந்த இரண்டில் ஒன்றை விரும்பி மற்றதை விடுவதல்ல வாழ்க்கை.

இரண்டையும் அப்படியே எடுத்துக்கொள்வதே வாழ்க்கை.


2 comments:

  1. கரிய மேகத்தில் உறையும் ஆண்டவனுக்காக சாலமோன் உயர் இல்லம் ஒன்றைக் கட்டுகிறார்.ஆனால் அந்த இல்லத்தை நிரப்பிய மேகத்தின் காரணமாக, குருக்களால் அங்கு பணி செய்ய இயலவில்லை.நம் வாழ்விலும் கரிய மேகங்கள் சூழலின் காரணமாக இடி,மின்னல்,புயல் இவை நம்மைத் தாக்கலாம்.நமது அரசியல்,குடும்பம்,சமூகம்,உறவு, ஆன்மா,உடல் இவை சார்ந்த பிரச்சனைகள் நம்மைத் தரமட்டமாக்கலாம். ஆனாலும் நாம் அண்ணாந்து பார்த்து அழைக்க நமக்கொருவர் இருக்கிறார்.தம் காதுகளைத் தீட்டிக்கொண்டு நம் குரலுக்கு செவிசாய்க்க ஆர்வமாயிருக்கிறார்.நாம் செய்ய வேண்டுவதென்ன? அவர் மேலாடையின் விளிம்பையேனும் தொட முயற்சிப்பது தான்.அந்தத் 'தொடுதல்' நமக்குத் தரும் சக்தியானது நாம் சோர்ந்து போன நேரங்களில் நம்மைத் தாங்கிப்பிடிக்கும்,உந்து சக்தியாகவும், நம்மை நாடி வருபவர்களுக்கு ....நம்மிலிருந்து சக்தி பெற விரும்புபவர்களுக்கு நாம் கொடுக்கும் அருமருந்தாகவும் அமையும்.முதலில் நாம் சக்தி பெறுவோம்; பின் சக்தியளிப்பவர்களாக மாறுவோம்.நல்லதொரு பதிவிற்காக தந்தைக்கு நன்றிகள்! இவ்வாரம் இனிதே அமைந்திட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Dear Father,Yes I do agree.It is applicable to me.Thanks for wonderful post.

    It has inspired me to live my life as it is during joyful and sorrowful moment.Congrats.

    ReplyDelete