Thursday, February 4, 2016

கண்ணில் விழுந்த தூசி

இன்று நாம் கொண்டாடி மகிழும் புனித அருளானந்தரைப் பற்றி இன்று கொஞ்சம் வலை விரித்தேன்.

1. 46 வயது வரை மட்டுமே இவர் வாழ்ந்தார்.

2. இந்தியாவுக்கு இரண்டு முறை வந்தார். முதல் முறை வந்தபோது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்படுகிறார். (இவரை தன் சொந்த நாட்டிற்கு அனுப்பிய மறவர் சீமை மன்னர் நம் மேலாண்மையின் அடையாளமாக இருக்கிறார். அதாவது, நம் மண்ணிற்கு வந்த மற்றவர்களை மதிக்கும் வழக்கும் தமிழினத்தின் ஒரு அழிக்க முடியாத அடையாளமாகவே இருந்திருக்கிறது. தன் மறைக்கு எதிரான ஒரு மறையை போதித்தாலும், அந்நிய நாட்டவராக இருந்தாலும், அவரை மனிதாபிமானத்தோடு அணுகுகிறார் இந்த மன்னர்)

3. அருளானந்தர் இந்திய கத்தோலிக்க திருச்சபையை நிறுவ முயற்சிகள் எடுத்திருக்கிறார். இதை செய்ய உண்மையிலேயே இவருக்கு நிறைய துணிச்சல் இருந்திருக்க வேண்டும். அருளானந்தர் இதற்காக நம் மொழியைக் கற்கின்றார். இந்து சமய முனிவர்களைப் போல உடையணிகின்றார். புலால் உண்ண, மது அருந்த மறுக்கின்றார். சைவவகை உணவையே உண்கிறார். அதாவது, தான் ஒருபோதும் மற்றவரிடமிருந்து அந்நியமாகிவிடக்கூடாது என்பதில் கருத்தாய் இருக்கிறார்.

4. தான் இறப்பதற்கு முந்தைய நாள் பின்வரும் கடிதம் ஒன்றை எழுதுகிறார்:
'சனவரி 28ல் என்னை விசாரித்து ரங்கநாத தேவன் முன்னிலையில் கொல்லப்பட வேண்டும் என்று தீர்;ப்பு கூறப்பட்டது...இங்கு நான் சனவரி 31 வந்து சேர்ந்தேன். பொறுமையின்றி நான் மரணத்தை எதிர்நோக்கியிருக்கின்றேன்...வீரர்கள் என்னையே கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்...இதற்குமேல் என்னால் எழுதுவது முடியாது.' (ஆதாரம்: விக்கிபீடியா)

இறுதி வாக்கியத்தில் அப்படியே நம் நெஞ்சைப் பிழிகிறார் அருளானந்தர். 'இதற்குமேல் என்னால் எழுத முடியாது' என்ற வாக்கியத்தில் எவ்வளவு சோகம் இருக்கிறது. 'எனக்கு எழுதுவதற்கு நிறைய இருக்கிறது...செய்வதற்கு நிறைய இருக்கிறது....சொல்வதற்கு நிறைய இருக்கிறது...' என எல்லா ஆசாபாசங்களும் இருந்தாலும், எல்லாவற்றுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கின்றார்.

5. நாளைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 6:14-29) திருமுழுக்கு யோவானின் மறைசாட்சியத்தை வாசிக்கின்றோம். அருளானந்தரின் பெயரில் அருளப்பர் இருப்பதாலோ என்னவோ, அவருக்கும் அதே போல நடக்கிறது. கிறிஸ்தவ மறைக்கு மாறிய தடியத்தேவனுக்கு நிறைய மனைவியர். முதல் மனைவியை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களை விலக்கிவிட வலியுறுத்துகின்றார் அருளானந்தர். தடியத்தேவன் நல்லவன். உடனே கீழ்ப்படிகின்றான். அப்படி விலக்கிவிடப்பட்ட பல மனைவியரில் ஒரு இளவல் கதலி ('காதலி' என்பதுதான் கதலி என ஆயிற்றோ!) தன் முறைமாமன் சேதுபதியிடம் முறையிட, பழிதீர்க்கின்றார் சேதுபதி.

அருளானந்தர் விசாரிக்கப்பட்டபோது தமிழில்தான் பேசியிருக்க வேண்டும். அதுவும், ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசியிருக்க வேண்டும். இவரின் தமிழ் கேட்டு மற்றவர்கள் நகைத்தார்களா? வெளிநாட்டவரை நம் நீதிமன்றங்கள் எப்படி நடத்தின? என்றெல்லாம் நமக்கு தெரியாது. ஆனால், கழுவேற்றப்படுகின்றார்.

தன் சாட்சிய பகிர்வில் திருமுழுக்கு யோவானையும், இறப்பில், மரத்தில் ஏற்றப்படுவதில் இயேசுவையும் ஒத்திருக்கின்றார் அருளானந்தர்.

திருமுழுக்கு யோவான் - அருளானந்தர்!

இருவருமே கண்களில் விழுந்த தூசி...

யோவான் ஏரோதியாவுக்கு...அருளானந்தர் கதலிக்கு...

இந்த இரண்டு இளவல்களும் தங்களின் தூசியை எடுக்க சின்னதொரு குச்சியைப் பயன்படுத்தினர்.

ஏரோதியா சலோமியை...கதலி சேதுபதியை...

எடுக்கப்பட்டது என்னவோ தூசிதான்...

ஆனால், இன்றும் காலத்தின் கண்ணத்தில் வடிந்த கண்ணீர்த்துளிகளாய் நிற்கிறார்கள்...

யோவானும்...அருளானந்தரும்...




3 comments:

  1. Dear Father,your messages are very precious and costly.Thank you for writing today also about St.John De Britto.

    இந்த "கண்ணில் விழுந்த தூசி" என்ற பதிவை படித்தவுடன் நான் உங்களுக்காக இந்த ஜெபத்தின் மூலம் ஜெபித்தேன். ஜெபிக்கின்றேன்.

    அதாவது

    புனித அருளானந்தரே,மகிமைமிக்க பாதுகாவலரே!
    உமது ஆன்மீக உழைப்புக்களையும், ஜெப தபங்களையும்,
    வீர தியாகங்களையும் முன்னிட்டு இறைவனிடம் இருந்து
    நாங்கள் கேட்கும் மன்றாட்டுக்களை பெற்றுத்தந்தருளும்-ஆமென்.

    தந்தைக்கு நன்றியும் பாராட்டுக்களும்!!!
    இன்னும் நிறைய எழுத என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இன்றைக்கு நினைவு கூறப்படுபவர் புனித அருளானந்தரே எனினும் அவரோடு ஒத்த குணாதிசயங்கள் கொண்ட திருமுழுக்கு யோவானையும் களத்தில் இறக்குகிறார் தந்தை.என்னதான் மேலை நாட்டிலிருந்து வந்திடினும் நம் 'மண்ணின் மைந்தனாகத்' தன்னை வரித்துக்கொண்டு உணவு,உடை,பழக்கவழக்கம் அனைத்திலும் ஒரு மறவனாக வாழ்ந்த அருளானந்தர் அந்நிய மோகத்தினால் அசிங்கம்பட்டு நிற்கும் நம்மில் பலருக்கு அஅறைகூவல்.உண்மைதான்....இவரின் கடைசி நிமிடங்கள் 'தந்தையே! ஏன் என்னைக்கைவிட்டீர்?'என்று கூட மௌனத்தில் உறைந்திருக்கலாம்.இவருக்கும்,திருமுழுக்கு யோவானுக்கும் உள்ள ஒற்றுமைப்படி தப்பு செய்பவர் யாராயினும் அவர்களைத்தட்டிக்கேட்கத் தங்கள் உயிரையும் பணயம் வைக்கத்தயங்க வில்லை. இன்று இந்தப்புனிதர்கள் நம் வீதிகளிலும் வலம் வந்தால் நம் முன்னே நடக்கும் அத்தனை அக்கிரமங்களுக்கும் கண்மூடி,வாய்மூடி சாட்சிகளாக நிற்கும் நம்மைப் பார்த்து என்ன சொல்வார்கள்.....ஐயோ! மனிதர்களே! உங்களுக்கெல்லாம் 'முதுகெலும்பு' என்ற ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியைத்தவிர? இன்றைய மனிதரின் இயலாமையைப் புரிய வைத்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  3. GITANJALI A BERNARD, CHENNAI

    Fr. YESU, your comparing of both Johns makes much sense: John de Britto and John the Baptizer. Who else can do it, except a "JESU"?

    One of the significant aspect of the lives of de Britto and of the Baptizer is the fact that they were Christian "prophets" - not just priests performing narcissistic, self-referencial, soothing, comforting, anathestic and inconsequential RITUALS!
    They were not!!

    This "difference" perhaps has been bypassed, ignored, forgotten and soft-pedaled as we have spent more of time in "comparing" world-faiths, than appreciably studying the Christian call, and its uniqueness...
    Christianity ought not to be - for a Christian - ONE AMONG THE WORLD RELIGIONS...

    I begin to wonder loud: Is prophecy of John the Baptizer and John de Britto anywhere in any other religious tradition?

    Formation houses, seminaries, novitiates, ashrams, institutions, pulpits, parishes, congregations etc. are manufacturing and spitting out too many "priestly-ritual" garbage.

    Hence, de Brittos and Baptizers are hardly birthed out...

    And yet another "hence:
    There are too many "kathalis" [Thadiathevar's wife] "Herodias" [King Philip's wife] are filling our royal courts with their angry ranting and scheming, even as our ordained "poojaris" are chanting their lungs out...as they have lost out their prophetic edge!

    ReplyDelete