Thursday, February 11, 2016

இணைத்திருமுறை நூல்கள்

நாம் இன்று தொடங்கியுள்ள தவக்காலத்தில், விவிலியத்தில் உள்ள இணைத்திருமுறை நூல்களை ஓர் அழகியல் பார்வையோடு படிக்கலாம் எனவும், படித்து ரசித்ததை பதிவு செய்யலாம் எனவும் விழைகிறேன்.

இணைத்திருமுறை நூல்கள் (Deutero-Canonical Books) என்றால் என்ன?

தோபித்து, யூதித்து, சாலமோனின் ஞானம், சீராக்கின் ஞானம், பாரூக்கு, 1 மக்கபேயர், 2 மக்கபேயர் ஆகிய ஏழு நூல்களும், எஸ்தர், தானியேல் நூல்களின் கிரேக்க இணைப்புக்களுமே இணைத்திருமுறை நூல்கள்.

இவைகளை பிரிந்து சபையினர் 'தூண்டப்பட்ட நூல்களாக' (inspired books) ஏற்றுக்கொள்வதில்லை. காரணம் ரொம்ப சிம்பிள். எபிரேயத்தில் எழுதப்பட்டால்தான் அது தூண்டப்பட்ட நூல் என்பது அவர்களின் வாதம். அவர்கள் மட்டுமல்ல எரோணிமுஸ் என்னும் ஜெரோம் காலம் தொட்டு, லூத்தர் வரை எல்லாரும் அப்படித்தான் நினைத்தனர். பல விவிலியங்களில் இந்த நூல்கள் 'திருமுறைப் புறநூல்கள்'  (Apocrypha) என்னும் தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

திரெந்து நகர திருச்சங்கம் (கி.பி. 1546) இவற்றை தூண்டப்பட்ட நூல்களாக ஏற்றுக்கொண்டது.

என்னைப் பொறுத்தவரையில், இணைத்திருமுறை நூல்கள் என்பவை ஒரு பாலம்.

முதல் ஏற்பாட்டையும், இரண்டாம் ஏற்பாட்டையும் மிக இலகுவாக இணைப்பவை இவை. முதல் ஏற்பாட்டு காலத்திற்கும், இரண்டாம் ஏற்பாட்டு காலத்திற்கும் உள்ள வரலாற்று பிளவை நிரப்புபவை இவை.

நாளை தோபித்து நூலோடு தொடங்குவோம்.


4 comments:

  1. நேற்றைய முன்தினம் உரோமையில் திருத்தந்தை அவர்களால் 'இரக்கத்தின் தூதுவர்' என விருது கொடுக்கப்பட்ட தந்தை யேசு அவர்களுக்குத் தங்களின் வலைப்பதிவின் மூலம் பயனுறும் அத்தனை வாசகர்களின் பெயராலும் வணக்கங்களும்,வாழ்த்துக்களும்! இந்த விருது தங்களுக்கு மட்டுமல்ல...தங்களுக்கு விலாசம் தந்த தமிழ் மண்ணுக்கும்,தாங்கள் சார்ந்துள்ள மதுரை உயர் மறைமாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கிறது.இறைவன் தங்களை மென்மேலும் ஆசீர்வதித்து தங்களது எழுச்சிமிகு எழுத்தின் மூலம் அநேக ஆன்மாக்களை அவர் பால் இழுத்திட உதவுவாராக! தங்களுக்கு நல்ல உடல்,உள்ள சுகம் கிடைக்கவும், தாங்கள் தொடும் காரியங்கள் அனைத்திலும் அவருக்கு மகிமை சேர்க்கும் கருவியாகத் தங்களை மாற்றிடவும் எங்களின் செபம் தங்களுக்குத் துணை நிற்பதாக! இந்தத் தவக்காலத்தில் தாங்கள் படைக்கப்போகும் முதல் ஏற்பாட்டையும்,இரண்டாம் ஏற்பாட்டையும் இணைக்கும் ஒரு பாலமான 'இணைத்திருமுறை நூல்களை' வரவேற்கிறோம்.நல்ல விதைகளை எங்கள் உள்ளங்களில் தூவிடத் தூய ஆவி தங்களுக்குத் துணை வரட்டும்!!! அன்புடன்......

    ReplyDelete
  2. GITANJALI A BERNARD, CHENNAI

    Dear Fr. Y. K.:

    As I read your plan for the LENTEN PROJECT, two things struck me.

    [a] Your take regarding what Aprocrypha mean to you. Perhaps what other scholars of Scripture might have painfully struggled to explain away in long-winding presentations, you just said it simply, succinctly and summarily: It is "A BRIDGE" between the Old and the New Testaments...

    [2] A reader here, Mrs Philomena Arockiasamy, comments about your blog:
    She mentions Holy Father's special appointment of you as a Messenger of Mercy; she writes about the honor you bring to Tamilnadu, and the Archdiocese of Madurai. Then she prayerfully blesses you multiple times [with exclamations].

    I almost thought of the following Gospel Text, "When he was speaking, a woman from the crowd called out and said to him, "Blessed is the womb that carried you and the breasts at which you nursed." [Luke 11;27]

    In either instance [Jesus or Yesu], it is only a "woman" can impart such blessings...

    ReplyDelete
  3. Dear Father,Congrats.

    Always good beginning is good end.

    All the best.Thanks

    ReplyDelete
  4. The word 'bridge' is apt for these holy books....Lovely...

    ReplyDelete