Tuesday, February 2, 2016

என்ன பிளான்

60 வயது நிரம்பிய ஒருவர், தன் வாழ்க்கையில் கற்ற 10 பாடங்களை, ஹார்வர்ட் மேலாண்மையியல் மாத இதழ் ஒன்றில் எழுதியிருந்தார் (இரண்டு வருடங்களுக்கு முன்).

அதை மீண்டும் எடுத்து நேற்று வாசித்துக் கொண்டிருந்தேன்.

அவர் சொல்லும் ஒரு பாடம் என்னவென்றால்,

'Let go off certainty!"

அதாவது, இது இது செய்தால் இது இது நடக்கும் என வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஒரு ஆய்வகத்தில் எதிர்பார்ப்பது போல எதிர்பார்த்து வாழ்வது.

நாம் தினமும் காலையில் எழும்போது இந்த நாள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று திட்டம் போட்டு எழுகிறோம். ஆனால் அந்த நாள் நாம் திட்டமிடுவது போல இருப்பதில்லை. சில நாள்கள் திட்டமிட்டதைவிட நன்றாக இருக்கும். சில நாட்கள் மோசமாக மாறிவிடும்.

நம் அன்பிற்குரியவர்கள், நண்பர்கள் எல்லாரும் இப்படித்தான் பிஹேவ் பண்ணுவார்கள் என நினைப்போம். ஆனால் அது சில நேரங்களில் நிறைவேறாது.

Certainty - இதற்கு எதிர்ப்பதம் uncertainty அல்ல. மாறாக, திறந்த மனதுடன் இருப்பது (openness). எது நடந்தாலும் ஏற்றுக்கொள்வது. வியப்புக்களை கண்டுணர்ந்து பாராட்ட கற்றுக்கொள்வது.

நாளைய முதல் வாசகத்தில் (2 சாமுவேல் 24:2-17) இப்படித்தான் ஒரு நிகழ்வு நடக்கிறது.

தாவீது தன்னுடன் இருந்த வீரர்களைக் கணக்கெடுக்கிறார். இது கடவுளின் பார்வையில் தீயதெனப்படுகிறது.

நாம் கேட்கலாம்! கணக்கெடுப்பதில் என்ன தப்பு? அடிக்கடி இன்வென்ட்டரி எடுப்பது நல்லதுதானே! எது குறைவாக இருக்கிறது, எது நிறைவாக இருக்கிறது என நாம் தெரிந்து கொள்ளலாமே!

எதற்காக கடவுள் இதை தவறு எனப்பார்க்கிறார் என்றால், தாவீது எல்லாவற்றையும் 'certain or sure''ஆக இருக்க வேண்டும் என நினைக்கிறார். இவ்வளவு வீரர்கள் இருந்தால் இவ்வளவு வெற்றி என கணக்கு போடுகின்றார். ஆக, தன் வெற்றியை தன்னைக் கொண்டு, தன்னிடம் இருப்பவற்றைக் கொண்டு உறுதி செய்ய நினைக்கிறார்.

ஆனால், கடவுளுக்கு இந்த உறுதித்தன்மை பிடிப்பதில்லை. அவர் வியப்புக்களின் இறைவன்.

நான் வாரத்தின் முதல் நாளெல்லாம் ப்ளானரில் இந்த வாரம் என்ன செய்ய வேண்டும் என எழுதும்போது எனக்குள்ளே சிரித்துக்கொள்வேன். நாம நம்ம வாழ்க்கைய பிளான் பண்றோம். அவரு என்ன பிளான் வச்சிருக்காரோ? என்று.

சில நேரங்களில் கடவுளுக்கும் 'ல', 'ழ' பிரச்சினை வருவதுண்டு:

'எனக்கு நல்ல வழி காட்டும்' என வேண்டுவோம்.

ஆனா, அவரு, 'நல்ல வலி காட்டிக்கொண்டிருப்பார்'.

இருந்தாலும் வியப்புக்களை எதிர்கொள்வதும் இன்பமே.


6 comments:

  1. " என்ன பிளான்"அருமையானதொரு பகிர்வு.தாவீது தம் அரசு பெரிதாகிவிட்ட சூழலில் குடிக்கணக்கெடுக்க கட்டளையிட்ட போது,நிறைய மக்களும் பல வீரர்களும் இருப்பது குறித்து பெருமை கொண்டது தவறாக அமைகிறது.

    தான் ஓர் அரசர்.ஆனால்,கடவுளின் பிரதிநிதியாக இருந்து இஸ்ரயேலை ஆள்பவர் என்ற மனநிலையினை மறந்து தன்னால்தான் வளர்ச்சி வந்தது என்று தற்பெருமை கொண்டபோது கடவுள் "காத்" மூலம் தாவீதின் பாவம் எவ்வளவு பெரியது என உணர்த்தினார்.

    தாவீது உடனே சுய விழிப்பு கொண்டார்.தடுமாறி,தடம் மாறிய சிந்தனையைக் கடவுளின் தடத்தில் நிற்கவைத்தார்.

    அந்த தடுமாற்றமும்,தடம் மாறுதலுமே நாம் கடவுளை மறந்து போகச் செய்கிறது.மேலும் "நான்" என்பது நம்மில் ஓங்குவதால் நாம் வழியை நோக்கிச் செல்வதிற்கு பதிலாக வலியை நோக்கிச் சென்று வியப்புக்களின் இறைவனை மறந்து விடுகிறோம்.
    தந்தை கூறியுள்ளவாறு நாங்களும் வியப்புக்களின் இறைவனை நோக்கி நடப்போம்.தந்தைக்கு பாராட்டுக்களும்,நன்றியும்!!!!

    ReplyDelete
  2. யோசிக்க வைக்கும் ஒரு பதிவு.அடுத்த நிமிடம் நமக்குச் சொந்தமில்லை எனத்தெரிந்தும் பல கற்பனைகளில் மிதக்கிறோம்; திட்டங்கள் தீட்டுகிறோம்.அதிகாலை விடியலின் போதே இன்று நம் நாள் எப்படி அமைய வேண்டும், நம் உறவுகள் நம்மை எப்படி அரவணைக்க வேண்டும் என்பதை நாமே முடிவு செய்கிறோம்.நாம் நினைத்தவை நடக்கும் போது மகிழ்வதும்,நடக்காதபோது மனம் மறுகுவதும் மனித இயல்பு.இன்று எனக்கென்ன கிடைக்கும் என்பதைவிட நம்மால் பிறருக்கு என்ன செய்யலாம் என்று மட்டுமே நினைத்தால் ஏமாற்றத்துக்கு இடமில்லை. அப்படியே நாம் ஏமாற்றங்களுக்குட்பட்டாலும் நம்மில் உறையும் வியப்புக்களின் இறைவன் நம் 'வலிகள்' யாவையும் நல் 'வழிகளாக' மாற்றுவார் எனச் சொல்ல வருகிறார் தந்தை.அவர் வாக்குப்படியே இன்றைய நாள் இனிமையான நாளாக அமைந்திட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. “God of surprises!”
    Well, it is an impressive piece of reflection…

    Perhaps, the character of a good piece of writing is that it reminds the reader of other writings.

    You know, you remind me of a cherished quote from Pope Francis:
    "It is true that our God is the God of surprises. Every day carries another surprise! Also, God breaks the mold. We will never move forward if we do not have the courage to break the mold, for our God impels us to do the following: to be creative about the future" [July 5, 2014].

    Is not the whole of Christian Faith a swirl of Heaven’s spinning sumptuous surprises on me?

    Who therefore indoctrinates me to bypass, ignore and overlook “the mighty hand, the outstretched arm and his ever-enduring love for me”?

    Who tells me that the Christ of my faith lies locked up – helplessly and muted - with his pampering presence in the tabernacles [only], flanked by dead candles and withered flowers?

    Who teaches me that the Holy Spirit is a recycling Spirit in the history of the Church, forcing me to adore the fossil of tradition?

    GITANJALI A BERNARD, CHENNAI

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. இதிலே எப்பவும் எனக்கு சந்தேகம் உண்டு.. தாவீது தானாகப் போய் செய்யலையே ? அப்புறம் ஏன் ஆண்டவர் தாவீதைத் தண்டிக்கணும் ?
    ( மீண்டும் இஸ்ரயேல்மீது ஆண்டவரின் சினம் பற்றி எரிந்தது. அவர்களுக்கு எதிராகச் செயல்பட அவர் தாவீதிடம், “புறப்பட்டுப் போய் இஸ்ரயேல், யூதா மக்களை எண்ணுவாய்” என்று தூண்டிவிட்டார். 2 சாமுவேல் 24:1)

    ReplyDelete