Sunday, March 22, 2015

நானும் தீர்ப்பிடேன்!

விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசுவிடம் அழைத்து வரும் நிகழ்வு யோவான் நற்செய்தியில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது (காண்க. யோவான் 8:1-11). மேலும் இந்தப் பகுதியை கிரேக்க மூலப்பதிப்பில் அடைப்புக்குறிகளுக்குள் உள்ளது. ஆக, இந்த நிகழ்வைப் பற்றிய அதிகாரப்பூர்வமான பதிப்பு நம்மிடம் இல்லை அல்லது நமக்குக் கிடைக்கவில்லை. இயேசுவைப் பற்றி எடுக்கப்பட்ட எல்லாத் திரைப்படங்களிலும் இந்த நிகழ்வு சித்தரிக்கபட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வை வைத்து பல சிறப்பான ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.

விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை மட்டும் அழைத்து வருகின்றனர் சில நல்லவர்கள்(!). பெண்ணைப் பிடித்தாயிற்று. கூட இருந்த ஆண் என்ன ஆனார்? தனியொரு பெண் மட்டும் விபச்சாரத்தில் ஈடுபட முடியுமா என்ன? அடுத்தவர் இல்லாமல் விபச்சாரம் எப்படி சாத்தியமாகும்?

ஏதோ தாங்கள் எல்லா நாளும் மோசேயின் கட்டளைப்படிதான் நடப்பது போல மோசேயின் சட்டத்தையும் மேற்கோள் காட்டுகின்றனர்.

இயேசு குனிந்து தரையில் எழுதுகின்றார். இயேசு எழுதினார் என்பதற்கு நமக்கு இந்த ஒரு சான்று தான் இருக்கின்றது. ஆனால் என்ன எழுதினார் என்பது பற்றி ஒவ்வொருவரும் யூகித்துக்கொள்ள வேண்டியதுதான்.

'உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் கல்லெறியட்டும்!'

இதுதான் இயேசுவின் புதிய கட்டளை.

ஆக, தன் நிலையைப் பார்க்காமல் மற்றவர்களின் நிலையைத் தீர்ப்பிடவோ,

யாருடைய உயிரை எடுக்கவோ நமக்கு உரிமை இல்லை.


2 comments:

  1. இன்றையப் பதிவில் வரும் 'இந்தப் பெண்ணின்' நிலைமை யாருக்குமே வரக்கூடாது.இன்றைய வாழ்க்கை முறையில் நாம் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் ஒரு 'பஞ்சாயத்து' எனில் யார்தான் இதிலிருந்து தப்ப முடியும்? சம்பந்தப்பட்டவர்களின் நிலை என்னாகும்? நெருக்கடியான நேரங்களில் நம்மில் பலர் நம்மை நல்லவராக்க் காட்ட எதிராளியைப் பலிகடாவாக்குவது அன்றாட நடப்புதான்.அடுத்த முறை இப்படியொரு சூழ்நிலை வரின் அடுத்தவரின் முதுகில் உள்ள துரும்பை அகற்றுமுன் நம் முதுகில் உள்ள விட்டத்தை அகற்ற முயல்வோம்.காலத்துக்கேற்ற ஒரு பதிவு.....

    ReplyDelete
  2. Anonymous3/27/2015

    God's love is unconditional. It can only look into the person not the sin.
    thanks yesu

    ReplyDelete