Monday, March 16, 2015

என் மகன் இறக்குமுன் வாரும்!

அரச அலுவலர் இயேசுவிடம், 'ஐயா! என் மகன் இறக்குமுன் வாரும்!' என்றனர்.
(காண்க. யோவான் 4:43-54)

நாளைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் மெசியாவின் வருகைக்குப் பின் இறப்பு இராது என்றும், முழுமையான வாழ்வை அனைவரும் வாழ்வார்கள் எனவும் இறைவாக்குரைக்கின்றார். நற்செய்தி வாசகத்தில் இயேசு இறப்பின் தருவாயிலிருக்கும் சிறுவனைக் காப்பாற்றுகின்றார்.

இறைவனின் பிரசன்னத்தில் இறப்பு இல்லை.
கடந்த வாரம் இணையதளத்தில் வெளிவந்த ஒரு கட்டுரை. கூகுள் நிறுவனம் மனிதர்களை 500 வருடங்கள் வாழ வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறதாம். நம் வாழ்நாட்களில் ஆய்வு வெற்றிபெறவில்லையென்றாலும், இனி வரும் காலங்களில் ஒருவேளை வாய்ப்பு இருக்கலாம்.

'இறக்குமுன் வாரும்!' என்று இயேசுவை அவசரப்படுத்துகிறார் அரசு அலுவலர்.

இயேசுவால் இறப்பிலிருந்து யாரையும் காப்பாற்ற முடியும் என்று நம்பும் அலுவலருக்குள் ஒரு சிறு நெருடல். ஒருவேளை இயேசு வருவதற்குள் தன் மகன் இறந்துவிட்டால் என்ன செய்வது?

நம்பிக்கை என்பதும் சரி. நல்லவராக இருப்பதும் சரி எப்போதும் ஒரு போராட்டம்.

எல்லாத்தையும் நம்பனுமா? அப்படின்னு மனம் கேட்கும்.

கொஞ்சம் கெட்டவனாகத்தான் இரேன்! என்று மூளை சொல்லும்.

இந்த இரண்டு போராட்டங்களிலும் வெற்றி பெறுவதே வாழ்க்கை, வாழ்வு.


2 comments:

  1. Anonymous3/16/2015

    Yesu good morning. Nice reflection. As you prayed in New Year let's pray Lord increase our Faith

    ReplyDelete
  2. வாழ்க்கையின் மிகப் பெரிய த்த்துவத்தை போகிற போக்கில் அள்ளித் தெளித்திருக்கிறார் தந்தை.ஆம்; " நம்பிக்கை என்பதும் சரி; நல்லவனாயிருப்பதும் சரி.." எப்போதுமே போராடி ஜெயிக்க வேண்டிய விஷயம்தான்.எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பவர்களுக்கு சரி..ஆனால் இப்படித்தான் வாழவேண்டும் என்ற நியதியோடு இருப்பவர்கள் அதற்கு ஒரு 'விலை' கொடுத்தே ஆக வேண்டும்.அதனாலென்ன? போராட்டம் தானே வாழ்க்கை? போராடித்தான் பார்ப்போமே!!!

    ReplyDelete