இன்றைய (13 நவம்பர் 2020) நற்செய்தி (லூக் 17:26-37)
இருவரில் ஒருவர்
மானிட மகனுடைய காலத்தில், அல்லது அவருடைய இரண்டாம் வருகையின்போது, அல்லது உலக முடிவில், அல்லது இறுதித் தீர்ப்பின் போது நடக்கும் நிகழ்வுகள் பற்றித் தம் சீடர்களோடு பகிர்ந்துகொள்கிறார் இயேசு.
இந்த நற்செய்திப் பகுதியில் இயேசு ஐந்து உருவகங்கள் அல்லது ஒப்புமைகளைப் பயன்படுத்துகின்றார்:
1. நோவாவின் காலம்
வாழ்க்கை இயல்பாக இருந்தது. ஆனால், திடீரென அவர்கள் வாழ்க்கை ஒருநாள் முடிந்துவிட்டது.
2. லோத்து சோதோமை விட்டுப் போன நாள்
எல்லாரையும் அழித்தது. லோத்து குடும்பம் தப்பியது. ஆனால், அழிவைத் திரும்பிப் பார்த்த லோத்தின் மனைவி உப்புச் சிலையாக மாறுகின்றார்.
3. ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுக்கப்படுவார். மற்றவர் விடப்படுவார்.
இரண்டு பேர் ஓய்ந்திருக்கின்றனர். ஓய்ந்திருப்பவர்களில் ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுகிறார். மற்றவர் விடப்படுகிறார்.
4. இருவர் மாவரைப்பர். ஒருவர் எடுக்கப்படுவார். மற்றவர் விடப்படுவார்.
இரண்டு பேர் பணிசெய்துகொண்டிருப்பர். அவர்களில் ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுகிறார். மற்றவர் விடப்படுகிறார்.
5. எங்கே நிகழும்? 'பிணம் எங்கேயோ கழுகுகளும் அங்கேயே!'
அதாவது, எங்கு எது நடக்குமோ அங்கு அது நடக்கும்.
மேற்காணும் உருவகங்கள் நமக்கு மூன்று விடயங்களைச் சொல்கின்றன:
அ. அந்த நாள் எப்போது என்பதை நாம் அறிந்துகொள்ள இயலாது.
ஆ. அந்த நாளின் நிகழ்வுகளை நாம் நிர்ணயிக்க முடியாது.
இ. அந்த நாளில் வாழ்க்கை இயல்பாகச் சென்றுகொண்டிருக்கும்.
அந்த நாளை எப்படி எதிர்கொள்வது?
முதல் வாசகத்தில் (காண். 2 யோவா 4-9) இக்கேள்விக்கான விடையைத் தருகிறார்:
'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோம்' - அந்நாள் வரை!
ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோம்' - அந்நாள் வரை!
ReplyDeleteGreat!
மிகச் சரியாக, மிக அருமையாகச் சொன்னீர் 🤝
இறுதித் தீர்ப்பு நாள் குறித்த நிகழ்வுகளின் தொகுப்பு.எப்பொழுது...எப்படி....எங்கே....யாருக்கு? பல புரியாத கேள்விகள்! தெரியாத பதில்கள்வ!யிற்றைக் கலக்கும் சில விஷயங்கள்!.
ReplyDeleteமாறும் அத்தனை விஷயங்களுக்கு நடுவிலும் மாறாதது ஒன்றே! அதுதான் “ அன்பு” ‘இதை ஒருவர் மற்றவரிடம் செலுத்துவோம்’- அந்நாள் வரை!
இந்த வரியில் ‘ அந்நாள் வரை’ நாம் செலுத்தும் அன்பு நித்தியத்துக்கும் நமக்குத் திருப்பிக் கிடைக்கும் என்ற விஷயம் ஒளிந்திருப்பதை உணர்கிறேன்.கலக்கத்துடன் ஆரம்பித்த விஷயமே எனினும் கலக்கம் போக்கும் வரியுடன் முடித்த ஒரு பதிவு! தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!