Tuesday, February 21, 2017

அன்பின் வலிமை

நாளை பேதுருவின் தலைமைப்பீட விழாவைக் கொண்டாடுகிறோம்.

உரோமை தூய பேதுரு பேராலயத்தில் நம் வலது புறத்தில் பேதுருவின் வெண்கலச்சிலை ஒன்று உண்டு. வழக்கமாக வைத்திருக்கும் சாவிகள் இல்லாமல் ஒரு நாற்காலி, ஒரு தொப்பி என ஒய்யாரமாக அமர்ந்திருப்பார். அவரின் பாதங்கள் பக்தர்களின் கரம் பட்டதால் சூம்பிப்போய் இருக்கும்.

பேதுருவின் வித்தியாசமான இந்த முகத்தையே நாளை திருநாளாகக் கொண்டாடுகிறோம்.

பேதுருவின் வாழ்க்கையை 'கண்ணீருக்கு முன்,' 'கண்ணீருக்கு பின்' என்று இரண்டாகப் பிரிக்கலாம். சேவல் கூவிய அந்த இளங்காலைப் பொழுதில் அவர் வடித்த கண்ணீர்த்துளிகள்தாம்.

தினமும் காலையில் சேவல் கூவும் சத்தம் கேட்கும்போதெல்லாம் இவருக்கு தான் செய்த பாவம்தானே நினைவிற்கு வந்திருக்கும்!

பழையது நல்லது என்றால் நாம் திரும்ப நினைத்து அசைபோடுகின்றோம்.

கெட்டது என்றால் அதைப்பற்றியே நினைக்க மறுக்கின்றோம்.

பேதுருவை தலைமைத்துவத்திற்கு உயர்த்தியது கடவுளின் அருள்தான் என்றாலும், அவரின் இந்த நல்ல குணமும்தான். அதாவது, தவறு செய்துவிட்டேன். கண்ணீர் வடித்துவிட்டேன். மாறிவிட்டேன். தன் குற்ற உணர்வு தன்னைக் கட்டிப்போட அவர் அனுமதிக்கவில்லை.

இந்தக் கட்டின்மையே எல்லா ஆன்மீகத்தின் ஆணிவேர்.

வருகிற 24ஆம் தேதி கோவைக்கு அருகில் இருக்கும் ஈஷா மையத்தில் நிறுவப்பட்டுள்ள 112 அடி சிவன் சிலையை திறந்து வைக்க மோடி வருகிறார் என்று ஒரே ஆரவாரமாக இருக்கிறது. 'இந்த சிலையால் என்ன பயன்?' 'இது நிறுவப்பட்ட இடம் பழங்குடியினரின் இடம்?' 'ஈஷா ஒரு குழப்பம்' என்றெல்லாம் நிறைய விமர்சனங்கள் எழுந்தாலும் சிலை கம்பீரமாக இருக்கிறது.

ஆனால், சிலை, கடவுள், பீடம், நன்மை இவையெல்லாம் தராத ஓர் ஆன்மீக அனுபவத்தை பேதுரு பெறுகின்றார். பேதுருவின் அந்த அடித்தள அனுபவம் தீமை அதிகம் புழங்கும் பிலாத்துவின் அரண்மனை வளாகத்தில் நிகழ்கிறது.

ஆக, எந்த இடத்திலும் நமக்கு ஆன்மீக அனுபவம் கிடைக்கலாம்.

எந்த இடத்திலும் நாம் கட்டின்மையை அடையலாம்.

இறுதியாக,

'ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே!
எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?'

என்கிறார் பேதுரு.

தான் மறுதலித்ததையும் மறந்துவிட்டார் பேதுரு. அன்பின் வலிமை இதுவே.

3 comments:

  1. "பேதுருவைத் தலைமைத்துவத்திற்கு உயர்த்தியது கடவுளின் அருள் தான் என்றாலும் அவரின் நல்ல குணமும்" தான்.ஆமாம்! " என் பாவமே,என் பாவமே என்று குமுறுவதை விட, என் பாவத்தை விட்டு வந்து விட்டேன்" என்று சொல்ல ஒரு தைரியம் வேண்டும்.அது பேதுருவுக்கு நிறையவே இருந்திருக்கிறது.இதைத்தான் 'கட்டின்மை' எனவும்,'ஆன்மீகத்தின் ஆணிவேர்' எனவும் கூறுகிறார் தந்தை. இயேசுவின் மீது அவருக்கிருந்த அன்பின் வலிமையால்
    அவர் திருச்சபைக்குத் தலைவராக மாறுவதும்,அதே தலைவருக்கு சீடனாக இருந்த யூதாஸ் குற்ற உணர்ச்சியின் காரணமாகத் தற்கொலை செய்து மாண்டுபோவதும் இரு வேறு துருவ நிகழ்வுகள்.நாம் பாவிகள் தான் என்னும் உணர்வு நம்மைக் கொன்றுவிடாமலிருக்க இந்த 'ஆன்மீக அனுபவத்தை' நாட வேண்டிய தருணமிது.செய்த குற்றங்களை மறப்போம்; அவரின் அன்பு ஒன்றையே ஏற்போம்.ஆன்மீகம் கொப்பளிக்கும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு ஒரு 'சல்யூட்!'.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Wonderful reflection fr.. you have illustrated the 2000 years back incident with 2017 news.. the conclusion is apt and awesome... it's finally the love of Jesus that reigns forever in our heart..

    ReplyDelete