Monday, February 20, 2017

ஆன்மீக குரு

நாளை நாம் வாசிக்கும் முதல் வாசகம் (காண். சீஞா 2:1-11) நான் அதிகமாக வாசித்த விவிலிய பகுதிகளில் ஒன்று.

நான் உரோமைக்குச் செல்லும் வரை எனக்கென ஒரு ஆன்மீக குரு ஒருவரை வைத்திருந்தேன். மாதா மாதம் அவரைப் போய் சந்திப்பேன். அவரோடு பேசுவேன். காலப்போக்கில் அவரைத் தேடி நான் செல்லுமுன், 'இந்த மாதம் நீ வரலயா?' என்று அவர் கேட்க ஆரம்பித்தார். ஒவ்வொரு மாதத்தின் நான்காம் செவ்வாய் அவரோடு என முடிவெடுத்தேன். அவருக்கு வயதாகிக்கொண்டே போனது. நான் உரோமையில் இருந்தபோது அவர் இறந்தும் விட்டார்.

உரோமையில் இருந்தபோது நான் மிஸ் பண்ணிய பல விஷயங்களில் ஒன்று ஆன்மீக குரு.

யாரை எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை.

அங்குள்ள ஓர் அருள்பணியாளரை எடுத்தேன். ஆனால் முதல் சந்திப்பே மறக்க முடியாத மறக்க வேண்டிய சந்திப்பாக மாறிவிட்டது. அதுமுதல் நான் யாரையும் வைத்துக்கொள்ள மெனக்கெடவில்லை.

அந்த நாள்களில்தான் சீராக்கின் இந்த இறைவாக்குப் பகுதியை வாசித்தேன்.

வாசித்த முதல் நாளே எனக்குப் பிடித்துப்போனது.

'குழந்தாய், ஆண்டவருக்கு பணிபுரிய நீ முன்வந்தால்' எனத் தொடங்கும் இந்தப்பகுதி. 'ஆண்டவருக்கு பணிபுரிய முன்வருபவர்' ஓர் அருள்நிலை இனியவராய்த்தானே இருக்க முடியும்.

ஒரு அருள்பணியாளர் அல்லது அருள்சகோதரி எப்படி இருக்க வேண்டும் என்பதை அப்படியே எழுதுகிறார் சீராக்கு:

'சோதனைகளை எதிர்கொள்!'

'உள்ளத்தில் உண்மை'

'உறுதி'

'துன்ப வேளையில் நோ பதற்றம்'

'ஆண்டவரைச் சிக்கென பிடி!'

'என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள்'

'இழிவு வரும்போது பொறுமையாய் இரு'

'ஆண்டவரிடம் பற்றுறுதி கொள்'

'அவரை நம்பு'

உரோம் நாட்களில்தான் நான் நம்பிக்கையில் தடுமாறினேன். 'கடவுள் இல்லை' என்ற நிலைக்கு வந்துவிட்டேன். ஆனாலும் அவர்மேல் உள்ள நம்பிக்கை குறையவில்லை. குழப்பமா இருக்கா? இதைவிட குழப்பமாக இருந்தது எனக்கு.

சீராக்கின் இந்த அறிவுரைகள் மட்டுமாவது நான் வாழ நினைக்கிறேன்.


7 comments:

  1. "அங்கைப் புண்ணை" ஆடி கொண்டு காட்டுவது போல் ஒளிவு,மறைவின்றித் தன் உள்ளத்தைத் திறந்து காட்டியுள்ளார் தந்தை.இவரிடம் எனக்கு மிக,மிகப் பிடித்த குணமே இதுதான்.யாருக்காகவும்,எந்த வெளிவேடமுமின்றி 'நான் இப்படித்தான்' எனத் தன்னைத் துகிலுறித்துக் காட்டும் இயல்பு.இவரின் வருகைக்காகக் காத்திருந்த முதல் ஆன்மகுருவிடமிருந்தும்,மறக்க வேண்டிய சந்திப்பைத் தந்த இரண்டாவது ஆன்மகுருவிடமிருந்தும் தந்தை கண்டிப்பாக சில பாடங்களைக் கற்றுக்கொண்டிருப்பார். அந்தப்பாடம் தான் மனிதரை விட்டு இவரை,தான் 'இல்லை' என்று குழம்பிய இறைவனை 'சிக்கெனப்' பிடித்துக்கொள்ள உதவி இருக்கிறது. ஒரு அருள் பணியாளருக்கு/ அருள் சகோதரிக்கு கொடுக்கப்படும் 'சீராக்கின்' அறிவுரைகள் அனைத்துமே தேனில் தோய்த்த பலாச்சுளைகளாக இருப்பினும், 'ஆண்டவருக்குப் பணிபுரிய முன்வருபவர்' 'ஒரு அருள் நிலை இனியவராய்த்தானே இருக்க முடியும்!' எனும் தந்தையின் மன வெளிப்பாடு 'அழகு' என்ற விஷயத்தையும் தாண்டி, இந்த அருள் நிலை இனியவர்கள் தங்கள் நிலையை உணர்ந்து நடக்கும் பட்சத்தில் 'எத்துணை பேறு பெற்றவர்கள்' என்ற விஷயத்தையும் சொல்லாமல் சொல்கிறது. என்னைப் போல வெளியே இருப்பவர்கள் எறியும் கற்களையும்,சொற்களையும் தாண்டி, இந்த அருள் நிலை இனியவர்கள் தங்களை அழைத்தவரை மட்டுமே நம்பியிருந்தால் எத்துணை நலம்!
    குழப்பத்தின் மத்தியிலும் 'நம்பிக்கை' எனும் நங்கூரத்தைத் தந்தை நம்பியிருந்த காரணத்தாலேயே இன்று இறைவன் தங்களை உயர்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளார் என்பது நான் சொல்லியா புரிய வேண்டும்? 'அவரைச்' சார்ந்துள்ள அனைத்து ' அருள் நிலைப் பணியாளர்களுக்காகவும்' செபிப்பதை நம் வாழ்வின் தலையாயக் கடமையாய்க் கொள்வோம்.தந்தைக்கு என் அன்பும்....பாராட்டும்....

    ReplyDelete
  2. my mom worked as a headmistress. She faced so many hurdles in her profession. Everyday she used to read the bible before starting the day and before starting work. One evening she came home and read these verses during the family prayer and said that those were what she read in the morning at school. I read it again and felt it aptly suits anyone who strives to the fullest in their profession.

    ReplyDelete
  3. தனது பணியாளர்களுக்கு கடவுள் கொடுத்த அன்பு கட்டளைகள் தான் இன்றைய முதல் வாசகம். எனக்கும் பிடித்தமான வாசகம். Bravissimo Don Yesu.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. God's word is always true..
    The words of the Lord is wisdom...
    It brings health to our inner mind...

    ReplyDelete