செபாகிடமும் சல்முன்னாவிடமும், 'நீங்கள் போரில் கொன்ற மனிதர்கள் எத்தகையோர்?' என்று கேட்டார். அவர்கள், 'உம்மைப் போல் அவர்கள் ஒவ்வொருவரும் அரச மைந்தரைப் போல் தோற்றமளிக்கின்றனர்' என்றனர். அவர், 'அவர்கள் என் சகோதரர்கள். என் தாயின் மக்கள். நீங்கள் அவர்களை உயிரோடு விட்டிருந்தால் நான் உங்களைக் கொல்ல மாட்டேன். இது வாழும் ஆண்டவர் மீது ஆணை!' (நீதித் தலைவர்கள் 8:18-19)
கிதியான் செபாகையும், சல்முன்னாவையும் பிடித்து விடுகிறார். அவர்களிடம் எதற்காகக் கொன்றீர்கள் எனக் கேட்கிறார். தன் இனத்தின் மேல் உள்ள பற்று இஸ்ரயேலருக்கு மிக அதிகம். இதற்குக் காரணம், கடவுள் தானாகத் தனக்கெனத் தேர்ந்தெடுக்குக் கொண்ட இனம் என்பதால் தான். ஒருவர் மற்றவர்மேல் உரிமை கொண்டாடினார்கள் அவர்கள். ஒருவர் மற்றவர்மேல் கொள்ளும் உரிமையே உறவின் முக்கிய அம்சம்.
நம் உறவுகள் நம்மேல் கொள்ளும் உரிமைகளுக்கு நன்றி கூறுவோம். அவர்கள் மேல் உரிமை கொண்டாடுவோம்.
இந்த நீதித் தலைவர்களும் இதில்வரும் கதாபாத்திரங்களும் என் போன்றவர்களுக்கு முற்றிலும் புதுசு.இவர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விவிலியத்தைப் படிக்கத்தூண்டும் தங்கள் முயற்சிக்குப் பாராட்டு.தங்கள் உறவையும் அதன் உரிமையையும் நிலை நாட்டத் துடிக்கும் இந்தக் கரங்களுக்குச்
ReplyDeleteசொந்தக்காரர் யாரோ?