Tuesday, November 12, 2013

தீதும் நன்றும்!

இதோ! இன்று உங்கள் முன்பாக ஆசியையும், சாபத்தையும் வைக்கின்றேன். நான் இன்று உங்களுக்கு விதித்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடித்தால் ஆசியும், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல், நான் இன்று உங்களுக்கு விதித்த வழிகளினின்று விலகி நடந்து, நீங்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றினால் சாபமும் உண்டாகும். (இணைச்சட்டம் 11:26-28)

'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்பது நம் பழமொழி. 

நன்மையோ, தீமையோ அதற்குக் காரணம் நாம்தான்.

இயற்கைச் சீற்றங்கள், விபத்துக்களால் வரும் தீமைகள் இந்தப் பழமொழிக்குள் வருமா? என்பது என் கேள்வி. ஆகையால் இந்தப் பழமொழியை நம் வாழ்வை நேரடியாகப் பாதிக்கும் வாழ்வியல் பிரச்சனைகளை மட்டும் எடுத்துக்கொள்வோம். 

கட்டளைகளைக் கடைப்பிடித்தால் ஆசி. விலகிச் சென்றால் சாபம். இதுதான் ஆண்டவரின் பார்வையில் ஆசியும், சாபமும்.

வாழ்வின் எதார்த்தங்களை ஆசியாகவும், சாபமாகவும் மாற்றுவது நாம்தான்.

என்றும் ஆசியையே நாடுவோம்!

1 comment:

  1. Anonymous11/12/2013

    கடுகு குறைந்தாலும் காரம் போகாதாம். கேட்டிருக்கிறேன்.என்னதான் செய்தியின் அளவு குறைந்தாலும் செய்தி தரும் காரத்துக்கும் மணத்துக்கும் குறைவில்லை.இறைவனின் கட்டளைகளை கடைபிடிப்பவர்கள் சாபததைப்பறறி ஏன் அஞச வேண்டும்?இறைவனை சார்ந்திருப்போருக்கு கொடும் நஞ்சைக் கொடுத்தாலும் அதனால் அவர்களுக்குத் தீமை இல்லை.அவரை மட்டுமே பறறிக் கொள்வோம்.நம்மை நோககி வரும் சாபக்கணைகளையும் ஆசீர்வாதமாக மாற்றுவோம். இரவு வணக்கங்கள்.

    ReplyDelete