அக்சா வந்தபோது, அவருடைய தந்தையிடமிருந்து ஒரு நிலம் கேட்குமாறு அவள் அவரைத் தூண்டினாள். எனவே அவள் கழுதையை விட்டு இறங்கியபோது காலேபு அவளிடம், 'உனக்கு என்ன வேண்டும்?' என்று அவளைக் கேட்டார். அவள் அவரிடம், 'எனக்கு நீர் ஓர் அன்பளிப்புத் தரவேண்டும். எனக்கு வறண்ட நிலத்தைத்தான் கொடுத்துள்ளீர். எனக்கு நீருற்றுக்களையும் தாரும்' என்றாள். எனவே காலேபு அவளுக்கு மேல் ஊற்றுக்களையும் கீழ் ஊற்றுக்களையும் கொடுத்தார். (நீதித் தலைவர்கள் 1:14-15)
ஒரு சமுதாயம் எந்த அளவிற்கு முதிர்ச்சியானது என்பதை அது பெண்களை மதிப்பிடும் நிலையை வைத்துத் தெரிந்து கொள்ளலாம். இஸ்ரயேல் சமுதாயம் நீதித் தலைவர்கள் காலத்தில் 'கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய்' ஆகிவிடுகிறது. தொடக்கத்தில் ஆண்களும், பெண்களும் சம உரிமை பெற்றிருந்தார்கள் என்பதற்கு இந்தப் பகுதி ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஒரு பெண் தன் சொத்தில் உரிமை கேட்பவராகவும், தான் எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லும் தைரியம் பெற்றவராகவும், 'நேர்படப் பேசு' என்பது போல சித்தரிக்கப்படுகின்றார். இப்போது குரல் கொடுக்கும் பெண் இந்நூலின் இறுதியில் மௌனமாகிவிடுகிறாள் என்பது வேதனைக்குரிய ஒன்று.
'எனக்கு இது வேண்டும்!' என்று சொல்வதற்குப் பதில், 'பரவாயில்லை. உனக்கு வேண்டுமானால் எடுத்துக்கொள்!' என்ற சொல்லி தங்கள் தேவைகளையும், ஆசைகளையும் குறைத்துக்கொண்டு தன் அருகிருப்பவரின் தேவையை நிவர்த்தி செய்து அதில் மகிழ்ச்சி காணும் எம் குலப் பெண்டிர் இன்னும் ஒரு படி மேலே நிற்கின்றனர்.
பெண்மை போற்றுதும்! பெண்மை போற்றுதும்!
ஆஹா! போகிற போக்கில் எவ்ளோ பெரிய உண்மையைச் சொல்லியிருக்கிறீர்கள்.தாம் துன்புறினும் அடுத்திருப்பவர் முகத்தில் மகிழ்ச்சியைக் காணத் துடிக்கும் எம்குலப்பெண்டிரால் தான் இன்னும் நம் ஊரில் மழை பெய்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.இதைப் பெரிய. மனத்துடன்
ReplyDeleteஒத்துக்கொண்ட தங்களைப் பாராட்டியே தீர வேண்டும்.
Nandru
ReplyDelete