இது நிகழ்ந்தது உங்கள் வாளாலும் அன்று. உங்கள் அம்பாலும் அன்று. நீங்கள் உழுது பயிரிடாத நிலத்தில் அறுவடை செய்தீர்கள். நீங்கள் கட்டாத நகர்களில் நீங்கள் வாழ்கின்றீர்கள். நீங்கள் நடாத திராட்சை, ஒலிவத் தோட்டங்களின் பயனை நீங்கள் நுகர்கின்றீர்கள். இவை அனைத்தும் நான் உங்களுக்குக் கொடுத்தவையே ... ... நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம். (யோசுவா 24:13,15)
செக்கேமில் யோசுவாவின் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் யாவே இறைவனோடு உடன்படிக்கையைப் புதுப்பிக்கின்றனர். 'யாவே இறைவன்' மட்டுமே தங்கள் இறைவன் என்ற நிலை மாறி படிப்படியாக மற்ற தெய்வங்கள் அவர்களின் சமயத்திற்குள்ளும், சமூகத்திற்குள்ளும் நுழைகின்றனர்.
'நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே பணி செய்வோம்!' என்று முதல் மொழி கூறுகின்றார் யோசுவா. மக்களும் அதை வழிமொழிகின்றனர்.
இறைவனுக்குப் பணி செய்வது என்பது ஒரு தேர்வு. அதை நாம் தெரிவு செய்தால் மற்றவைகளைத் தெரிவு செய்ய முடியாது.
ஒவ்வொரு பொழுதும் அதைப் புதுப்பித்துக் கொண்டேயிருத்தல் அவசியம்.
நமக்குச் சிறிதும் தகுதியில்லாத நிலையிலும் கூட இறைவன் தம்கொடைகளை நம்மீது அள்ளித்தெளிக்கிறார் என்பதற்கு மேறகண்ட பகுதி ஒரு எடுதுத்துக்காட்டு.அதற்கும் மேலாக இறைவனுக்குப் பணிசெய்யவென்று தங்களை அர்ப்பணித்த துறவறத்தாரின மேன்மையையும் விளக்குகிறது.அவர்களுடன் இணைந்து நாமும் நம் வீட்டாரும் ஆண்டவருக்குப் பணி செய்வோமே!
ReplyDelete