Sunday, December 8, 2019

தூய்மை நிலையும் நோக்கும்

இன்று கன்னி மரியாளின் அமல உற்பவத்திருநாளைக் கொண்டாடுகிறோம்.

பிரான்சு நாட்டில் லூர்து நகரில் தன்னை வெளிப்படுத்திய மரியாள், 'நாமே அமல உற்பவம்' என்று தன்னை வெளிப்படுத்துகின்றார்.

'அன்னை மரியாள் பிறப்பின்போதே பாவ மாசு இன்றிப் பிறந்தார்' - இதுதான் அமல உற்பவ நம்பிக்கைக் கோட்பாட்டின் பொருள்.

கடவுள் மரியாளின் வாழ்க்கை வகுத்த திட்டமே அமல உற்பவம்.

இன்று நாம் நம்முடைய வாழ்விற்கு நிறையத் திட்டங்களைத் தீட்டுகிறோம். ஆனால், நம்முடைய வாழ்விற்கென்று கடவுள் ஒரு நோக்கத்தை வைத்திருக்கின்றார். நோக்கம் தெளிவாகிவிட்டால் நம்முடைய திட்டம் கூர்மைப்படுத்தப்படும்.

இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 1:3-6,11-12), பவுல், 'நாம் தூயோராகவும் மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் கிறிஸ்து வழியாக நம்மைத் தேர்ந்தெடுத்தார்' என்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 3:9-15,20) படைப்பின் தொடக்கத்தில் நம்முடைய முதற்பெற்றோர் தவறியபோது, அவர்களைக் கண்டிக்கின்ற கடவுள், அவர்களுடைய வாழ்வியல் வரைபடத்தையும் கொடுக்கின்றார்.

மரியாளின் அமல உற்பவம் அவருடைய வாழ்வின் நிலையையும் நோக்கத்தையும் நமக்குச் சொல்கிறது.


1 comment:

  1. “ அமல உற்பவம்” மரியாளைக்குறித்துச் சொல்லப்படும் வார்த்தைகளில் மிக முக்கியமானது; பிற மனிதப் பிறவிகளிலிருந்து மரியாளை வேறுபடுத்துவது. கடவுள் மரியாளின் வாழ்க்கை குறித்து வகுத்த திட்டமே “ அமல உற்பவம்”.... அழகாக விவரிக்கிறார் தந்தை.நம்முடைய திட்டம் இறைவனின் திட்டத்தோடு இணைந்து கைகோர்க்கையில் நமது திட்டம் வெற்றியை மட்டுமே கிட்டும் என்பதும் நம் பலபேரின் அனுபவமாயிருக்கும். நமது படைப்பின் திட்டமே நம்மைத் தூயோராகவும்,மாசற்றவராகவும் ஆக்கவே என்பதும், நாம் வழி தவறுகையில் ஆதாம் ஏவாளைக் கண்டித்ததுபோல் இறைவன் நம்மையும் சரிப்படுத்தி அவரது திட்டத்தை நம்மில் திணிக்கிறார் என்பதும் உண்மை. நம்முடைய பிறப்பு மாசற்றதாக இல்லாமல் போயிருப்பினும், பிற்ப்பிற்குப்பின் நாம் தூயோராகவும்,மாசற்றோராகவும் ஆகலாம் என்பது நம்மைக் குறித்த இறைவனின் எதிர்பார்ப்பு என்பதை உணரும் நேரமிது. ஏவாள் நமக்குள் திணித்த கரையை தம் அமல உற்பவத்தால் அழிக்க முன்னெடுத்த மரியாளை நம் பிறவியின் பெருமையாக உணருவோம்.
    எத்தனை இடைவெளி வந்திடினும் தன் சிந்திக்கும் திறனுக்கு என்றுமே வலுசேர்க்கும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete