Wednesday, December 11, 2019

பொடிப்பூச்சி

இன்றைய (12 டிசம்பர் 2019) முதல் வாசகம் (எசா 41:13-20)

பொடிப்பூச்சி

திருவருகைக்காலத்தின் முதல் வாசகங்களை வாசிக்கும்போதெல்லாம், 'பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதுபோல' என்ற பழமொழிதான் என் நினைவிற்கு வருகிறது.

ஏன் கடவுள் இஸ்ரயேல் மக்களை நாடுகடத்துமாறு விட வேண்டும்? அப்படி விட்டபின் ஏன் அவர்களைப் பார்த்து குய்யோ முறையோ என்று புலம்ப வேண்டும்? அப்புறம் ஏன், 'உன்னை அப்படி ஆக்குவேன், இப்படி ஆக்குவேன்' என்று இறைவாக்குரைக்க வேண்டும்?

'கலகலப்பு' திரைப்படத்தில 'இதுக்கு பருத்திமூட்டை பேசாமா குடோன்லயே இருக்கலாம்ல!' என்று சொல்வதுபோல இருக்கிறது.

இஸ்ரயேல் என்ற பிள்ளையை நன்றாகக் கிள்ளி விடுகின்ற ஆண்டவராகிய கடவுள் தொட்டிலை மாங்கு மாங்கு என்று ஆட்டி குழந்தையைத் தூங்கவைக்க முயல்கின்றார்.

'புழுவே, பொடிப்பூச்சியே' என்று கொஞ்சும் அவர், அவர்களோடு உடனிருப்பதாக வாக்களிப்பதோடு, 'உன்னைப் புதிய கூர்மையான போரடிக்கும் கருவியாக்குவேன்' என்று உயர்த்துகின்றார். வலுவற்ற புழுவாக இருக்கும் இஸ்ரயேல் மலைகளைப் போரடித்து நொறுக்கும் அளவிற்கு உறுதியான இரும்புக் கம்பியாக மாறுகிறது இறைவனின் தொடுதலால்!

இறைவனின் உடனிருப்பும் தொடுதலும் கிடைப்பவர்கள் இப்படி மாறியிருப்பதை நாம் வரலாற்றில் நிறையவே கண்டுள்ளோம்.

ஒரு பக்கம், இறைவனின் செயல்கள் நமக்குப் புரியாமல் இருந்தாலும், மறுபக்கம் அவரின் உடனிருப்பு நமக்கு ஆற்றல்தருவதாகவே இருக்கிறது.


3 comments:

  1. உண்மையே! பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டிவிடும் கதைதான் இன்றைய வாசகம் நமக்கு நினைவுபடுத்துவது. தன்மக்களைப் “புழுவே,பொடிப்பூச்சியே” என்றழைக்கும் அதே இறைவன் தான் “ அஞ்சாதே! நான் உனக்குத் துணையாய் நிற்பேன்” என்கிறார்.சில விஷயங்களால் மனம் கனத்துப்போயிருக்கும் எனக்கு இன்றைய வாசகத்தின் ஒவ்வொரு வரியும் வருடிவிடுவது போல் இருக்கிறது.வலுவற்ற ஒரு புழுவையும் கூட ‘அவரின்’ தொடுதலும், உடனிருப்பும் கூர்மையான கருவியாக்க முடியும் என்று உரக்கச்சொல்கின்றன இன்றைய வரிகள்.பொட்டல் மேடுகளில் ஆறுகளையும், பாலைநிலங்களில் தடாகங்களையும் தோன்றச்செய்யும் இறைவன் என்னிலும் பல நல்ல விஷயங்களைச்செய்ய முடியும் என என்னில் நம்பிக்கை விதைகளை ஊட்டும் வரிகள். இன்றைய வாசகங்களின் அனைத்து வரிகளுமே ஒரு அழகிய தாலாட்டாய் இருந்திடினும், தனது அனுபவங்களைக்கொண்டு இன்னும் அவற்றிற்கு அர்த்தம் சேர்க்கும் தந்தையை இறைவன் ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete