'அவற்றுக்கு வாய்கள் உண்டு. ஆனால் அவை பேசுவதில்லை.
செவிகள் உண்டு. ஆனால் அவை கேட்பதில்லை.
மூக்குகள் உண்டு. ஆனால் அவை முகர்வதில்லை.
கைகள் உண்டு. ஆனால் அவை நடப்பதில்லை.
தொண்டைகள் உண்டு. ஆனால் அவை குரல் எழுப்புவதில்லை.'
(திருப்பாடல் 115:5-7)
பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், தொடுதல் என்பவை மனிதர்களின் ஐம்புலன்கள்.
இந்த ஐம்புலன்களில் கேட்டலும், நுகர்தலும் மட்டும் தான் எபிரேய சிந்தனைக்குத் தெரிந்திருந்தது. பார்த்தல், சுவைத்தல், தொடுதல் போன்றவை இல்லை. அதற்குப் பதிலாக பேசுதலும், நடப்பதும், குரல் எழுப்புவதும் இருந்தன. ஆனால் இந்த மூன்றும் வெளியிலிருந்து தகவல் வருவதற்கல்ல, மாறாக, தகவல்கள் உள்ளிருந்து வெளி வருவதற்குப் பயன்படுகின்றன.
வெளியிலிருந்து தகவல்கள் மனித மூளைக்கு கேட்டல் வழியாகவும், நுகர்தல் வழியாகவுமே இருப்பதாக நம்பினர் எபிரேயர்.
ஆகையால் தான் இன்றும் இஸ்ரயேல், பாலஸ்தீனாவுக்குச் சென்றால் நூலகங்களில் அனைவரும் சப்தமாகத் தான் படித்துக் கொண்டிருப்பர். காதுகள் வழி செல்லும் தகவல் மட்டுமே நிலைத்து நிற்கும் என்பது அவர்களின் கருத்து.
ஆகையால் தான் இணைச்சட்ட நூல் கூட 'இஸ்ரயேலே கேள்!' என்று சொல்கின்றது. 'பார்' என்று சொல்லவில்லை. இதன் தொடர்ச்சியாக இயேசுவின் திருமுழுக்கின் போது வெளிப்படும் வானகத் தந்தையின் வார்த்தைகள் கூட 'இவருக்குச் செவி கொடுங்கள்' என்றே இருக்கிறது.
மேலே சொன்ன ஐந்து குணங்களும் தங்கள் இறைவனுக்கு இருப்பதாகவும், மற்ற சிலைகளுக்கு இல்லை எனவும் நம்பினர் இஸ்ரயேல் மக்கள்.
மேலே சொன்ன குணங்கள் சொல்வது என்ன?
எந்த உறுப்பு எந்த வேலையைச் செய்ய வேண்டுமோ, அந்த உறுப்பு அந்த வேலையைச் செய்ய வேண்டும். அப்படி இல்லாத எல்லாமே வெறும் கல்தான்.
நாம் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோமோ அதற்கான வேலையைச் செய்வதும் அவசியம் தானே!
'அவர்களுடைய கடவுள் எங்கே?'

ஐம்புலன்களும் அவற்றிற்கு காரணமான உறுப்புக்களும் எந்நாட்டினராயினும்,எம்மத்த்தைச் சார்ந்தவராயினும் எல்லோருக்குமே ஒன்றுதான்.அவை பற்றிய மதிப்பீடு வேண்டுமானால் மாறலாம்.ஆனால் எந்த உறுப்பாயினும் நாம் அதை எப்படி,எத்துணை அளவுக்கு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் அதன் வளர்ச்சியும்,ஸ்திரமும்.டார்வினின் பரிணாமக் கொள்கை சொல்வதும் இதுதான்.ஆகவே நம் உடல் உறுப்புக்களை அவற்றிற்கான வேலையைச் செய்ய அனுமதிப்போம்; நம் உடல்நலம் பேணுவோம்; நம்மைப் படைத்தவனுக்குப் பெருமை செய்வோம்...நுணுக்கமான விஷயங்களைக்கூட இத்தனை தெளிவாகச் சொல்லும் தங்கள் திறமைக்கு ஒரு சபாஷ்...
ReplyDelete