Wednesday, June 25, 2014

நீரே என் புகலிடம், என் அரண்!

திபா 91ஐ இன்று நாம் சிந்திப்போம்.

'எண்ணமே உனக்கு!' என்பது முதுமொழி. அதாவது நாம் எப்படி எண்ணுகிறோமோ அப்படியே நமக்கு நடக்கிறது.

நாம் வாழும் இவ்வுலகம் கண்ணாடி உலகம்.

நாம் அன்றாடம் பணப்பரிமாற்றம் செய்கிறோம். பல நேரங்களில் பணத்தை நாம் மற்றவர்களிடம் பரிமாறும் போது வெறும் பொருளாக மட்டுமே பரிமாறுகின்றோம். நாம் பணத்தை மற்றவர்களிடம் கொடுக்கும் போது அதை ஆசிர்வதித்து, அதைப் பெறுபவரை ஆசிர்வதித்துக் கொடுத்தால் அது நம்மிடமே திரும்ப வருமாம். ஏனெனில் பணம் ஒருவரின் உழைப்பைக் குறிக்கின்றது.

பணத்தை மட்டுமல்ல, நாம் பயன்படுத்தும் வார்த்தைகளையும் ஆசிர்வதித்துப் பகிர்ந்தளித்தால் அதுவும் ஆசீராகத் திரும்புமே!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் என் அம்மாவிற்கு இன்றைய திருப்பாடலும், இன்றையு வலைப்பதிவும் அர்ப்பணம்:

'ஆண்டவர் உம்மை வேடரின் கண்ணியினின்றும்
கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார்.
அவர் தம் இறக்கைகளின் கீழ் நீர் புகலிடம் காண்பீர்.
அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும்.

இரவின் திகிலுக்கும் பகலில் பாய்ந்து வரும் அம்புக்கும்
நீர் அஞ்சமாட்டீர்.
இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும்
நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சமாட்டீர்.

தீங்கு உமக்கு நேரிடாது.
வாதை உம் கூடாரத்தை நெருங்காது.

நீர் செல்லும் இடமெல்லாம்
உம்மைக் காக்கும்படி,
தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார்.

நீடிய ஆயுளால் அவர் உங்களுக்கு நிறைவளிப்பார்...'

(திபா 91)


1 comment:

  1. 91ம் சங்கீதம்..நம்மைத் தாங்கும் இறைவனின் உடனிருப்பை நமக்கு ஞாபகமூட்டும் ஒரு திருப்பாடல்.இது மின்மினிப்பூச்சிகளின் யுகம்.இன்றே பிறந்து,பல வண்ணங்கள காட்டி மகிழ்ந்து தங்கள் இறப்பையும் தாங்களே தேடிக்கொள்ளுபவர் மத்தியில் தாம் நாம் வாழ்கிறோம்.இவர்களின் தாக்கத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் ஒரு கேடயம்.இன்னலுற்ற ,தனிமையான நேரங்களில் இதை ஒருமுறை சொல்லிப்பார்க்கும் யாருக்குமே புரியும் இந்தத் திருப்பாடல் செய்யும் 'magic'....தந்தைக்கு என் மனம் கனிந்த நன்றிகள்...

    ReplyDelete