Friday, December 27, 2013

என்னை அழைத்தீர்களா?

சிறுவன் சாமுவேல் ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான். அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்தது. காட்சியும் அவ்வளவாக இல்லை. அப்போது ஒருநாள் ஏலி தம் உறைவிடத்தில் படுத்திருந்தார். கண்பார்வை மங்கிவிட்டதால் அவரால் பார்க்க முடியவில்லை. கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை. கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தான். அப்பொழுது ஆண்டவர், 'சாமுவேல்' என்று அழைத்தார். அதற்கு அவன், 'இதோ! அடியேன்' என்று சொல்லி, ஏலியிடம் ஓடி, 'இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா?' என்று கேட்டான். (1 சாமுவேல் 3:1-5)

சாமுவேல் ஆண்டவருக்காக நேர்ந்தளிக்கப்பட்டு சீலோவில் ஆண்டவரின் இல்லத்தில் ஏலியோடு குடியிருக்கின்றார். இறைவனின் இல்லம் பற்றிச் சொல்லும்போது 'இறைவனின் பிரசன்னம்' அந்நாள்களில் அவ்வளவாக இல்லை என்று விவிலியம் சொல்கிறது. விவிலியத்தில் இறைவனின் மௌனம் நிறையவே இருக்கின்றது. ஏன் இன்றும் கூட இறைவனின் காட்சிகள் வெளிப்படுவதே இல்லை. 

'கண்பார்வை மங்கிவிட்டது ஏலிக்கு!' 'கடவுளின் விளக்கும் மெதுவாக அணைந்து கொண்டிருக்கிறது'. இன்றைய சிந்தனைப் பகுதியில் மையமாக இருக்கும் வார்த்தை 'காட்சி', 'கண்கள்'. 

வயது முதிரும்போது கண்பார்வை மங்குகின்றது. இது உடலில் குறையும் காட்சி. நம் மனதில் பிரச்சினைகள் இருக்கும்போது கடவுள் நம்பிக்கை தளர்கின்றது. இது உள்ளத்தில் குறையும் காட்சி. உடலிலும், உள்ளத்திலும் சில நேரங்களில் விளக்கு முணுக் முணுக் என்று எரிந்துகொண்டுதான் இருக்கின்றன.

அந்த நேரத்தில் இறைவன் நம்மையும் பெயர் சொல்லி அழைக்கின்றார்.

நாமும் கேட்போம்: 'என்னை அழைத்தீர்களா?'

1 comment:

  1. Anonymous12/28/2013

    இன்றையப் பகுதி ஏனோ தெரியவில்லை...ஒட சோக இழை ஓடுவதைஉணரமுடிந்தது. பக வனயங்களில் கள்ளமும் உடலும்.படுசேர சோர்ந்து போகுமபோது.இறை நம்பிக்கை கூட தளர்ந்து விடுகிறது.அந்நேரஙகளில் உள்மனத்தில் எரியும் விளக்கின் திரியைத்தூண்டிவிட்டால்அவர்.குரலைக்.கேட்க முடியுமோ என்னவோ.பொருத்திருந்து கேட்போம் இறைவன் நம் பெயரையும்
    உச்சரிப்பதை.

    ReplyDelete