Sunday, December 15, 2013

'நகோமி' என அழைப்பது ஏன்?

அவரோ, 'என்னை 'நகோமி' என அழைக்காதீர்கள். 'மாரா' என அழையுங்கள். நிறைவுடன் இங்கிருந்து சென்றேன். ஆனால் ஆண்டவர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரச் செய்தார். ஆண்டவர் என்னைத் தண்டித்து விட்டார். எல்லாம் வல்லவர் என்மீது துயரத்தைச் சுமத்தியுள்ளார். இப்படியிருக்க என்னை 'நகோமி' என அழைப்பது ஏன்?' என்றார். (ரூத்து 1:20-21)

'நகோமி' என்றால் எபிரேயத்தில் 'இன்பம்' என்பது பொருள். 'மாரா' என்றால் 'கசப்பு' என்பது பொருள். தன் வாழ்க்கை 'இன்பமாய்த்' தொடங்கி 'துன்பமாய்' முடிந்தது என்று புலம்புகின்றார் நவோமி. 

நவோமியும், ரூத்தும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புகின்றனர்.

அவர்கள் திரும்பும் காலம் 'வாற்கோதுமை அறுவடை' தொடங்கியிருந்தது எனக் குறிப்பிடுகிறது. வளமையின் காலத்தில் அவர்கள் உள்நுழைகிறார்கள். 

வறுமை மறந்து வளமை நுழைகிறது நவோமி வாழ்வில்.

நம் வாழ்விலும்...

எல்லாம் இழந்து விட்டோம் என்று புலம்புகிற நேரம் சற்றே ஓரமாகத் திரும்பிப் பார்ப்போம். அங்கேயும் வாற்கோதுமை அறுவடை நடந்து கொண்டிருக்கலாம்!

'நகோமி' என அழைப்பது ஏன்?

1 comment:

  1. Anonymous12/15/2013

    வளமையும் வறுமையும் நம் வாழ்வில் மாறி மாறி வருவது இயற்கை.வளமை வருகையில் முகம் மலரும் நாம் வறுமையைக் கண்டு முகம் சுளிக்கிறோம் எலியாவைக் காகத்தைக் கொண்டு போஷித்த இறைவன்...நவோமியையும்,ரூத்தையும் வாற்கோதுமை அறுவடையால் ஆசீர்வதித்த இறைவன் நாம் சோர்ந்து போன நேரங்களில் நம்மையும் நலன்களால் நிரப்புவார். இந்த . ந்ம்பிக்கையையூட்டிய ஆசிரியருக்கு நன்றிகள்.

    ReplyDelete