ரூத்து போவாசின் பாதங்களில் விழுந்து வணங்கி, 'என்னை ஏன் இவ்வாறு கருணைக் கண் கொண்டு நோக்குகிறீர்? அயல் நாட்டுப் பெண்ணாகிய என்னை ஏன் இவ்வளவு பரிவுடன் நடத்துகிறீர்?' என்று கேட்டார். போவாசு, 'உன் கணவன் இறந்ததிலிருந்து உன் மாமியாருக்காக நீ செய்துள்ள அனைத்தையும் கேள்விப்பட்டேன். உன் தந்தையையும் தாயையும் சொந்த நாட்டையும் துறந்துவிட்டு, முன்பின் தெரியாத ஓர் இனத்தாருடன் வாழ நீ வந்திருப்பது எனக்குத் தெரியும்' என்றார். (ரூத்து 2:10-11)
ரூத்து தன் மாமியாருக்குக் காட்டிய தாராள உள்ளத்திற்காக போவாசும் அவருக்குத் தாராள உள்ளம் காட்டுகின்றார். நாம் ஒருவருக்குச் செய்யும் நன்மை நமக்கே திரும்ப வரும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
தாராள உள்ளம் காட்டுவோம். தாராள உள்ளம் பெறுவோம்.
'என்னை ஏன் இவ்வளவு பரிவுடன் நடத்துகிறீர்?'
தாராள உள்ளத்தின் மேன்மையை யோவாசின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர,இது பண்டிகைகளின் காலம்.இருப்பவர்கள்.இல்லாதவர்களோடு தஙகள் ஆசீர்வாதத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய நேரம.கொடுப்பதின் இன்பம் பெறுவதில் இல்லை.என்பதை.உணரும் தருணம.கொடுப்போம்....அலுங்கிக் குலுங்கிக் கொடுப்போம். நாம் நம் முன்கையை நீட்டினால் அவர் தன் முழங்கையை நீட்டி நம்மை தாராளமாக ஆசிர்வதிப்பார் என்பதை உணருவோம்.
ReplyDelete