Tuesday, December 17, 2013

ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!

சிறிது நேரம் கழித்து, போவாசு பெத்லகேமிலிருந்து அங்கு வந்து சேர்ந்தார். அவர் அறுவடையாளர்களை நோக்கி, 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!' என்றார். அவர்களும், 'ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக!' என்றார்கள். அவர் அறுவடையாளர்களின் கண்காணியிடம், 'இவள் யார் வீட்டுப் பெண்?' என்று கேட்டார். அதற்கு அறுவடையாள்களுக்கு மேற்பார்வையாளராய் நியமிக்கப்பட்டிருந்த வேலையாள், 'இவள்தான் மோவாபு நாட்டிலிருந்து திரும்பியுள்ள நகோமியோடு வந்திருக்கும் மோவாபியப் பெண்' என்றார். (ரூத்து 2:4-7)

'நிலா வந்தாச்சு!' 'கிருஷ்ணா வந்தாச்சு!' என்ற தெய்வத்திருமகள் வசனம் போல, 'ரூத்து வந்தாச்சு!' 'போவாசு வந்தாச்சு!' என்று போவாசும் வந்து விட்டார். 

'யார் கண்ணில் எனக்குத் தயை கிடைக்கிறதோ!' என்று எண்ணிய ரூத்துக்கு போவாசின் தயை கிடைக்கிறது. ரூத்தைக் கண்டு கொள்கிறார் போவாசு. போவாசின் நல்ல குணங்களை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

இன்று போவாசின் கடவுள் பக்தி. 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!' என்று திருப்பலியில் நாம் சொல்லும் வார்த்தைகள் போவாசின் வார்த்தைகளே. பழைய ஏற்பாட்டில் வானதூதர்கள் மனிதர்களைச் சந்திக்க வரும்போதெல்லாம் இதே வார்த்தைகளைச் சொல்லியே வாழ்த்துவர். நாசரேத்தூர் மரியாவிடம் வரும் கபிரியேல் வானதூதரும் இதே வார்த்தைகளைச் சொல்லியே வாழ்த்துகின்றார். 

நம்மிடம் எல்லாம் இருந்தாலும் 'ஆண்டவர்' என்ற நம்பிக்கை இல்லையென்றால் என்ன ஆகும்!

'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!'

2 comments:

  1. Anonymous12/17/2013

    இன்றையப் பகுதியைத் திறந்தவுடன் கண்ணில் பட்ட வாசகம் ''ஆண்டவர் உங்களோடு இருப்பாராக''...இறைவனே நேரில் வந்து வாழ்த்திய உணர்வைக் கொடுத்தது.ஆசிரியருக்கு நன்றி.இந்தப் பிண்ணனியில் தான் இன்று ''வாழ்க வளமுடன்'' போன்ற இயக்கங்கள் செயல்படுவதைஉணர்கிறேன்.இன்றைக்குத் திருமணத்திற்குக் காத்திருக்கும் நம் பெண்கள் மணமகனை வெளி அடையாளங்களை விட்டு ரூத் தெரிந்தெடுத்த முறையைப் பின்பற்றினால் நன்றாயிருக்குமே!

    ReplyDelete
  2. நிலா வந்தாச்சு!' 'கிருஷ்ணா வந்தாச்சு!' என்ற தெய்வத்திருமகள் வசனம் போல, 'ரூத்து வந்தாச்சு!' 'போவாசு வந்தாச்சு!' என்று போவாசும் வந்து விட்டார். very very wonderful

    ReplyDelete