Wednesday, October 4, 2017

ஆண்டவரின் மகிழ்வே

'ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை' (காண். நெகே 8:1-12)

நாளைய முதல் வாசகம் ரொம்பவே துள்ளலான வாசகமாக இருக்கிறது.

இஸ்ரயேல் மக்கள் முதன் முதலாக பைபிள் எழுதப்பட்டு வாசிக்கப்படுவதைக் கேட்கின்றனர். இதுதான் இவர்கள் கேட்ட முதல் பைபிள் அல்லது நற்செய்தி.

இந்த நிகழ்வில் பங்கேற்கும் யாரும் பசியோடும், தாகத்தோடும், வெறுமையோடும் செல்லக்கூடாது எனவும், அனைவரும் இந்த நாளைக் கொண்டாட வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றார் எஸ்ரா.

'ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை' என்ற வரியைச் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

'ஆண்டவரின் மகிழ்வு' என்ற வார்த்தையை 'ஆண்டவர் கொள்ளும் மகிழ்வு,' அல்லது 'ஆண்டவர் மேல் கொள்ளும் மகிழ்வு' அல்லது 'ஆண்டவரால் கொள்ளும் மகிழ்வு,' அல்லது 'ஆண்டவருடைய மகிழ்வு' என்று பொருள் கொள்ளலாம்.

'ஆண்டவருடைய மகிழ்வு' என்ற பொருளில்தான் எபிரேய சொல்லாடல் உள்ளது. ஆங்கிலத்திலும் 'தெ ஜாய் ஆஃப் த லார்ட்' என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

முதல் கேள்வி. ஆண்டவர் மகிழ்ச்சி அடைவாரா? துன்பம் அடைவாரா? அவருக்கு ஃபீலிங்ஸ் உண்டா.

உண்டு என்று நாம் எடுத்துக்கொள்வோம். ஏனெனில் இங்கே ஆண்டவர் ஓரு சாதாரண மனிதருக்கு ஒப்பிடப்படுகிறார்.

ஆண்டவருடைய மகிழ்வு எதில் இருக்கும்?

இன்னைக்கு என்னோட மகிழ்வு எதில் இருக்கிறது?

என்னோட மகிழ்வு குறுகியது. சில நிமிடங்களே நீடிக்கக் கூடியது. குற்றவுணர்வுடன் கூடியது.

என்னோட மகிழ்வு பல நேரங்களில் என் வலுவைக் குறைத்துவருகின்றது.

ஆனால், இதற்கெல்லாம் மாறாக ஆண்டவருடைய மகிழ்வு நமக்கு வலிமையைத் தருகிறது என்கிறது நெகேமியா நூல்.

நாம் செய்யும் ஒரு செயல் ஆண்டவருடைய மகிழ்வா என எப்படிக் கண்டுகொள்வது?

ரொம்ப சிம்பிள்.

எந்த செயலைச் செய்யுமுன் கண்களை மூடிக்கொண்டு நமக்குப் பிடித்தமான கடவுளின் முகம் ஒன்றை மனதில் கொண்டுவர வேண்டும். அந்த முகம் சிரித்தது என்றால் அது ஆண்டவரின் மகிழ்வு. அது சிரிக்கவில்லை என்றால் அது என் மகிழ்வு.

ஆண்டவரின் மகிழ்வு வலிமை.

எனது மகிழ்வு வலுவின்மை.

1 comment:

  1. 'ஆண்டவரின் மகிழ்வே உங்களின் வலிமை' இதுவே இஸ்ரேல் மக்களுக்குக் கிடைத்த முதல் நற்செய்தி எனத் தன் பதிவை ஆரம்பிக்கும் தந்தை ஆண்டவரின் வலிமை தரும் மகிழ்வை நம்முடைய வலுவின்மையைத் தரும் மகிழ்வோடு ஒப்பிடுகிறார்.அது மட்டுமின்றி நமது ஒவ்வொரு செயலும் 'ஆண்டவரின் மகிழ்வா?' என்றறிவதற்கான சூட்சுமத்தையும் சொல்லித்தருகிறார்.நம் கண்முன்னேயுள்ள கடவுளின் முகம் சிரிப்பதும்,சிரிக்க மறுப்பதும் நம் கையில் தானே உள்ளது!.யோசிப்போம்....எதை நாம் தேர்ந்தெடுக்கப்போகிறோம் என்பதை.வாழ்வின் சிறிய பெரிய வித்தைகளை நம் விரல் சொடுக்கில் கொண்டுவரும் தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete