இன்றைய (25 ஜனவரி 2021) திருநாள்
ஆண்டவரே நீர் யார்?
இன்று புனித பவுலின் மனமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.
'சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?'
'ஆண்டவரே, நீர் யார்?'
'நீ துன்புறுத்தும் நாசரேத்து இயேசு நானே'
மேற்காணும் உரையாடல் மனித வரலாற்றில் நடந்தேறிய நாள் இந்நாள்.
'சவுலே, சவுலே' என்னும் வார்த்தைகள் வானிலிருந்து கேட்டவுடன், 'ஆண்டவரே' என சவுல் (பவுல்) பதில் கொடுத்தது எப்படி?
தனக்கென்று வேறு ஆண்டவரை வைத்திருந்த சவுல், அவர்களை எல்லாம் விடுத்து இயேசுவைப் பற்றிக்கொள்ள விழைகின்றார்.
இன்று என் ஆண்டவர் யார்?
அவரைப் பற்றிக்கொள்தலே மனமாற்றம்.
மனமாற்றத்தை நம்மில் விதைப்பது இறைவனே எனினும், அதை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் நிலங்களான மனங்கள் மட்டுமே மாற்றம் காணுகின்றன.அப்படிப்பட்ட மனங்கள் மட்டுமே தன்னை நோக்கி வரும் குரல் “ஆண்டவருடையது” என்பதை அடையாளம் காணுகின்றன. இன்று நான் யார் பக்கம்?
ReplyDelete“ மகளே! ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” எனும் இயேசுவின் குரல் என் செவிகளில் விழுந்தால் என் பதிலென்ன? யோசிக்க வைத்த தந்தைக்கும்,அவர் சார்ந்திருக்கும் திருச்சி “ இறையியல் கல்லூரிக்கும்” என் அன்பு நிறை திருநாள் வாழ்த்துக்கள்!!!
மன்னிக்கவும்....” புனித பவுல் இறையியல் கல்லூரி”....
ReplyDeleteSmart & sweet🤝
ReplyDeleteExcellent thampi👌