Monday, January 11, 2021

உமக்கு இங்கு என்ன வேலை?

இன்றைய (12 ஜனவரி 2021) நற்செய்தி (மாற் 1:21-28)

உமக்கு இங்கு என்ன வேலை?

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் முதல் போதனை மற்றும் முதல் வல்ல செயலை வாசிக்கக் கேட்கின்றோம்.

இரண்டுமே அதிகாரம் கொண்டதாக இருக்கிறது.

இரண்டின் இறுதியிலும் மக்கள் வியப்பில் ஆழ்கின்றனர்.

இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கத்தில், பேய் ஓட்டும் நிகழ்வைப் பதிவு செய்கிறார் மாற்கு. அதாவது, அலகைகளும் இயேசு யார் என்று அறிந்திருந்தன. ஆனால், அவருடன் இருந்த சீடர்கள் அவரை இறுதிவரை புரிந்துகொள்ளவில்லை என்ற முரணைக் காட்டுவதற்காகத்தான் இப்படிப் பதிவு செய்கிறார் என நினைக்கிறேன்.

'உமக்கு இங்கு என்ன வேலை?' என்று அலகை இயேசுவிடம் கேட்கிறது.

இயேசு கேட்க வேண்டிய கேள்வி இது. அலகை முந்திக்கொள்கிறது.

இருக்கக் கூடாத ஒன்று இருக்கக் கூடாத இடத்தில் இருப்பதும், இருக்க வேண்டிய ஒன்று, இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பதும் ஆபத்தானது.

மூன்று விடயங்கள்:

(அ) இயேசுவின் ஊற்று கடவுள். ஆக, அவர் போதனையும் செயலும் வல்லமையோடும், அதிகாரத்தோடும் இருந்தன.

(ஆ) தீயவனின் வார்த்தைகள் இயேசுவுக்கு இனிக்கவில்லை. உடனே விரட்டுகிறார் தீமையை.

(இ) 'கடவுளே! உமக்கு என் வாழ்வில் என்ன வேலை?' என்று நான் கேட்டு, அவரை என் வாழ்வில் அகற்ற நினைத்த பொழுதுகள் எவை?

3 comments:

  1. இருக்கக்கூடாத ஒன்று இருக்கக் கூடாத இடத்தில் இருப்பதும், இருக்க வேண்டிய ஒன்று இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பதும் ஆபத்தானது...உண்மை! வாழ்க்கை பலமுறை நமக்குக் கற்றுக்கொடுத்த பாடம் தான் இது.

    தீயவனின் வாயிலிருந்து வந்த தீய வார்த்தைகள் பிடிக்காத இயேசு அவனை அப்புறப்படுத்துகிறார்.

    அடுத்த கேள்வி நம்மை நோக்கிப்பாய்கிறது.” கடவுளே உமக்கு என் வாழ்வில் என்ன வேலை?”.... கேட்க தைரியம் இருந்திருக்குமா? தெரியவில்லை. வாய் வார்த்தைகளால் இல்லையெனினும் நாம் தனிமைப்பிடியில் வாழ்ந்த பொழுதுகளில்......நம்மவரே நம்மை “ உதவாக்கரை” என ஒதுக்கிய நேரங்களில்...... இறைவனின் வார்த்தை நம்மில் பகிரப்படும் பொழுதுகளில் நம் நினைவுகளால் நாம் அப்படி நினைத்திருக்க வாய்ப்புண்டா? இல்லையெனில் மகிழ்வோம்; உண்டு எனில் வருத்தம் தெரிவிப்போம்.

    ஒரு சம்பாஷனையை யோசிக்க வைத்து வாழ்வின் பாடமாக மாற்றிய தந்தைக்கு நன்றிகள். இனிய இரவு வணக்கங்கள்!!!

    ReplyDelete
  2. அலகைகளும் இயேசு யார் என்று அறிந்திருந்தன. ஆனால், அவருடன் இருந்த சீடர்கள் அவரை இறுதிவரை புரிந்துகொள்ளவில்லை.
    Yes.

    இயேசு கேட்க வேண்டிய கேள்வி இது. அலகை முந்திக்கொள்கிறது.

    இப்படித்தான்,பல விஷயங்களில்,நாமும் முந்திக்கொள்கிறோமோ?🤔

    எனக்கு நானே விடைகாண வேண்டிய கேள்வி.

    என் அருகில் இருக்கும் இயேசுக்கிறிஸ் துவை, நான் சரியாக புரிந்துகொண்டிருக்கிறேனா?

    நன்றி🙏

    ReplyDelete