Thursday, November 3, 2016

என்னைப் போல

'சகோதர, சகோதரிகளே, நீங்கள் அனைவரும் என்னைப் போல வாழுங்கள்!'

(காண். பிலி 3:17-4:1)

கொஞ்ச நாட்களுக்கு முன்பாக வாட்ஸ்ஆப்பில் நீண்ட கவிதை ஒன்று வந்தது.

நிலவு சூரியனைப் போல இருக்க விரும்புவதில்லை

ரோஜா மல்லிகை போல இருக்க விரும்புவதில்லை

என நீண்டு

ஆக, நீ நீயாக இரு

யாரைப் போலவும் இருக்க முயலாதே!

என்ற செய்தி தரப்பட்டது.

நான் நாங்களாகத்தான் இருக்க முடியும்.

நீங்கள் நீங்களாகத்தான் இருக்க முடியும்.

ஆனால், நாம் சில நேரங்களில் இவரைப் போல இருக்க, அவரைப் போல இருக்க என ஆசைப்படுகிறோம்.

சில நேரங்களில் நமக்கு மாதிரிகளும் தேவைப்படுகிறார்கள்.

ஆகையால்தான், நாளைய முதல் வாசகத்தில் தூய பவுல் 'என்னைப் போல இருங்கள்!'

இயேசுவும்கூட, தான் சீடர்களின் பாதம் கழுவியபின் 'என்னைப் போல செய்யுங்கள்!' என்கிறார்.

இங்கே பவுலின் நாணயம் மற்றும் நேர்மை என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது.

எந்தவொரு மாசும் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தால் அல்லது ஏதோ ஒருவிதத்தில் முன்மாதிரியாக இருந்தால்தானே, அப்படிச் சொல்வதற்கு வாய் வரும்.

இன்று நான் என் பணித்தள மக்களைப் பார்த்து, 'என்னைப் போல இருங்கள்!' என்று சொல்ல முடியுமா?

1 comment:

  1. ஒரு மாவிதையிலிருந்து மாமரம் வருவதும்,ஒரு ரோஜாக்கன்றிலிருந்து ரோஜாமலர் தோன்றுவதும் தான் இயற்கை.மற்றபடி எது வந்திடினும் அது இயற்கைக்குப் புறம்பானது. மற்றதொரு மரநிழலில் வளரும் செடி அதிக நாளைக்குத் தாக்குப்பிடிக்க இயலாது.அதேபோன்று ஒவ்வொருவரும் வளர்ந்துவரும்போது அவரவரின் மண்வாசனை மட்டுமே அவரில் வீசவேண்டும்.இங்கு 'அசல்'களுக்கு மட்டுமே மதிப்பு...நகல்களுக்கல்ல.இப்படியொரு அசலான மனிதராக இருப்பதாலேயே தூய பவுல் நம் கண்களுக்குத் முன்மாதிரி மனிதராகத் தெரிவது மட்டுமின்றி,அவரைப்போல பிறரும் வாழ அறைகூவல் விடவும் அவரால் முடிகிறது.கண்டிப்பாக எந்த ஒரு மாசும்,மறுவும் இல்லாத, மற்றவருக்கு முன்மாதிரியான வாழ்க்கை வாழும் ஒருவருக்கு மட்டுமே இது
    சாத்தியம். அந்த வழியில் தந்தைக்கு மட்டுமல்ல..இடுக்கலான வாயில் வழியாகப் பிரயாணம் செய்யத் துணிந்த யாருக்கும் இது சாத்தியமே. இன்றே அதற்குப் பிள்ளையார் சுழி இடலாமே! இதில் தந்தைக்கு ஏன் தயக்கம்?

    ReplyDelete